சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
October 15th, 02:23 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை -2024, தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 15th, 10:05 am
எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 15th, 10:00 am
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 14th, 05:31 pm
அக்டோபர் 15-ம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (WTSA) 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 27th, 10:56 am
இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 27th, 10:35 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.The digital potential of our nation is unparalleled, perhaps even in the history of mankind: PM
December 08th, 11:00 am
PM Modi addressed India Mobile Congress via video conferencing. PM Modi said it is important to think and plan how do we improve lives with the upcoming technology revolution. Better healthcare, Better education, Better information and opportunities for our farmers, Better market access for small businesses are some of the goals we can work towards, he added.இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் பிரதமர் ஆற்றிய உரை
December 08th, 10:59 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் நடந்த இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் தொடக்க உரையாற்றினார். “பங்கேற்பு புதுமை சிந்தனை – புத்திசாலித்தனமான, உத்தரவாதமான, நீடித்த செயல்பாடு'' என்பது இந்த மாநாட்டின் அடிப்படை விவாதப் பொருளாக உள்ளது. `தற்சார்பு இந்தியா,' `டிஜிட்டல் பங்கேற்புநிலை' மற்றும் `நீடித்த வளர்ச்சி, தொழில்முனைவோர் முயற்சி & புதுமை சிந்தனை படைப்பு' என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு இசைவான செயல்பாடுகளை உருவாக்குவது இதன் நோக்கமாக உள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.PM to address India Mobile Congress 2020 on 8th December 2020
December 07th, 03:18 pm
Prime Minister Shri Narendra Modi will give the inaugural address at the virtual India Mobile Congress (IMC) 2020 on 08 December 2020 at 10:45 AM.