இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (இந்த்ஆஸ் எக்டா) காணோலி கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
April 02nd, 10:01 am
எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்-“இந்த்ஆஸ் எக்டா” பிரதமர் முன்னிலையில் கையெழுத்து
April 02nd, 10:00 am
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் திரு டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் மேன்மைமிகு ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்
March 21st, 06:08 pm
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.2-வது இந்தியா – ஆஸ்திரேலியா இணையவழி உச்சி மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொடக்க உரை தமிழாக்கம்
March 21st, 12:30 pm
க்யூன்ஸ்லாந்திலும், நியு சவுத் வேல்சிலும் வெள்ளம் காரணமாக உயிர் மற்றும் உடைமைகளை இழந்தோருக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பாக நான் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியா – ஆஸ்திரேலியா இணையவழி உச்சிமாநாடு
March 17th, 08:30 pm
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே காணொலி வாயிலான இரண்டாவது உச்சிமாநாடு 2022 மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது காணொலி காட்சி மூலமான உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.