இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு

November 19th, 11:22 pm

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.

ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்

August 26th, 01:02 pm

ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். குவாட் அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் இருதரப்பு உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு

May 24th, 06:41 am

எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.