நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: பிரதமர் திரு. நரேந்திர மோடி
August 11th, 04:50 pm
தில்லியில் 109 புதிய பயிர் ரகங்களை இன்று வெளியிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலைக்கு உகந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் வெளியிட்டார்
August 11th, 02:00 pm
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய, உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் ஆகஸ்ட் 11 அன்று வெளியிடுகிறார்
August 10th, 02:07 pm
பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 11 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.