பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத்திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

October 09th, 03:07 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2028 வரை தொடர ஒப்புதல் அளித்தது.

விண்வெளித் துறை சீர்திருத்தங்களால் தேசத்தின் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்' (மனதின் குரல்)

August 25th, 11:30 am

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று மீண்டும் ஒருமுறை தேசத்தின் சாதனைகள், நாட்டுமக்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவை பற்றிய உரையாடல்களே. 21ஆம் நூற்றாண்டு பாரதத்திலே ஏராளமான விஷயங்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரத்திற்கு உரம் சேர்த்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் நமது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினோம். நீங்களும் இதைக் கொண்டாடியிருப்பீர்கள். மீண்டும் ஒருமுறை சந்திரயான்–3இன் வெற்றியை நினைந்து களித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தான் சந்திரயான்-3, நிலவின் தென்பாகத்தில், சிவசக்திப் புள்ளியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. பாரதம் இந்த கௌரவம் மிக்க சாதனையைப் படைத்த முதல் தேசமானது.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை

August 16th, 05:42 pm

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

August 15th, 09:20 pm

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

August 15th, 03:04 pm

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 01:09 pm

நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

டெல்லி செங்கோட்டையில் 78வது சுதந்திர தினத்தின் காட்சிகள்

August 15th, 10:39 am

78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்

August 15th, 10:16 am

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

இந்தியா 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:30 am

78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

August 15th, 07:05 am

78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் திரு, நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவரின் உரை, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபட ஊக்கப்படுத்துகிறது: பிரதமர்

August 14th, 09:05 pm

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரை, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் மூவர்ணக் கொடி கொண்ட சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

August 09th, 09:01 am

சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார். ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிங்கலி வெங்கய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

August 02nd, 02:02 pm

பிங்கலி வெங்கய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மூவர்ணக் கொடியை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றி, harghartiranga.com இணைய தளத்தில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு உங்கள் ஆலோசனைகளை வழங்கவும்

August 01st, 05:55 pm

ஆகஸ்ட் 15, 2024 அன்று 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரையில் உங்களின் மதிப்புமிக்க யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்க உங்களை அழைக்கிறோம்.

'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

லோகமான்ய திலகரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை

July 23rd, 09:57 am

லோகமான்ய திலகர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு புனேயில் லோக்மான்ய திலகரின் தேசிய விருதைப் பெற்ற நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையையும் திரு மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 13th, 11:19 pm

இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க! என்று சொல்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமரின் கலந்துரையாடல்

February 13th, 08:30 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வணக்கம் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் 7 அமீரகங்கள் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினரும், அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர்.

2024 ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

December 31st, 12:56 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஜம்முவின் எல்லைப் பகுதி பஞ்சாயத்து தலைவரின் அர்ப்பணிப்புக்காக பிரதமர் பாராட்டு

November 30th, 01:25 pm

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் விவசாய ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000 வது மக்கள் மருந்தகத்தையும் பிரதமர் அர்ப்பணித்தார்.