இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
December 29th, 06:44 pm
இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு இது முக்கியமான தருணம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (இந்த்ஆஸ் எக்டா) காணோலி கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
April 02nd, 10:01 am
எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம்-“இந்த்ஆஸ் எக்டா” பிரதமர் முன்னிலையில் கையெழுத்து
April 02nd, 10:00 am
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (இந்த்ஆஸ் எக்டா) மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் திரு டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் மேன்மைமிகு ஸ்காட் மோரிசன் முன்னிலையில் காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.