
PM to inaugurate Centenary Celebrations of Acharya Vidyanand Ji Maharaj on 28th June in New Delhi
June 27th, 05:06 pm
PM Modi will inaugurate the Centenary Celebrations of Acharya Vidyanand Ji Maharaj on 28th June in New Delhi. The year-long celebration will include cultural, literary, educational, and spiritual initiatives across the country, aimed at celebrating the revered Jain spiritual leader's life and legacy and spreading his message.
ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் நாளை (ஜூன் 24) தொடங்கி வைக்கிறார்
June 23rd, 05:24 pm
இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலைவரான ஸ்ரீ நாராயண குருவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூன் 24, 2025) காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகின்றார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் 1925 மார்ச் 12 அன்று சிவகிரி மடத்தில் மகாத்மா காந்தியின் பயணத்தின் போது நடந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம், மத மாற்றங்கள், அகிம்சை, தீண்டாமை ஒழிப்பு, முக்தி அடைதல், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த உரையாடல் நடந்தது.
ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
June 20th, 04:16 pm
ஒடிசாவில் பிஜேபி அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக இன்றுடன் (ஜூன் 20) ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி நடைபெறும் இந்த விழா பொதுச் சேவைக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவொரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். ஒடிசாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் தீரு மோகன் மஜ்ஹி மற்றும் அவரது சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, ஒடிசா மாநில வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளீர்கள்.ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 20th, 04:15 pm
ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புவனேஸ்வரில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். ஒடிசாவின் முழுமையான வளர்ச்சிக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, குடிநீர், நீர்ப்பாசனம், விவசாய உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை உள்ளடக்கிய ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் பதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
June 04th, 12:37 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
May 02nd, 03:45 pm
ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 02nd, 03:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அமராவதி விமான நிலையம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
April 16th, 09:18 pm
அமராவதி விமான நிலையம் திறக்கப்பட்டது, மகாராஷ்டிராவுக்கு, குறிப்பாக விதர்பா பகுதிக்கு ஒரு நல்ல செய்தி என்று பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமராவதியில் செயல்படும் விமான நிலையம், வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்
April 02nd, 02:00 pm
பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 04th, 04:05 pm
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கருணைமிக்க முயற்சிகளுக்காக திரு அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டிய பிரதமர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வனஉயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக வந்தாரா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 23rd, 06:11 pm
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
February 23rd, 04:25 pm
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை நான ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: பிரதமர்
January 11th, 06:30 pm
சுரங்கப்பாதை திறப்பு விழாவிற்காக தாம் ஜம்மு காஷ்மீரின் சோன்மார்க் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம்; சோனாமார்க் சுரங்கப்பாதை திட்டத்தை ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
January 11th, 05:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 13 ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சோனாமார்க் செல்கிறார். காலை 11:45 மணியளவில், அவர் சோனாமார்க் சுரங்கப்பாதையை பார்வையிடுவார், அதைத் தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெறும். இந்நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார்.We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM
January 09th, 10:15 am
PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 09th, 10:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.Serving the people of Andhra Pradesh is our commitment: PM Modi in Visakhapatnam
January 08th, 05:45 pm
PM Modi laid foundation stone, inaugurated development works worth over Rs. 2 lakh crore in Visakhapatnam, Andhra Pradesh. The Prime Minister emphasized that the development of Andhra Pradesh was the NDA Government's vision and serving the people of Andhra Pradesh was the Government's commitment.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
January 08th, 05:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பகவான் சிம்ஹாசலம் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு மரியாதை செலுத்திய திரு மோடி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் ஆசீர்வாதத்துடன், நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆந்திராவில் அரசு அமைந்த பிறகு தாம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற வாகனப் பேரணியின் போது தமக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்புக்காக திரு மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் ஒவ்வொரு வார்த்தையையும் மதிப்பதாக அவர் கூறினார். திரு நாயுடு தமது உரையில் கூறிய அனைத்தையும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இந்திய மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 05th, 06:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.