
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 14th, 10:45 am
மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே, தாய்மார்களே, அன்பர்களே!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 14th, 10:30 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது என்றும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் பாராட்டினார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் இன்று பிரதமர் வெளியிடப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிர்காலத்தை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை (ஜனவரி 14) பிரதமர் பங்கேற்கிறார்
January 13th, 11:14 am
நமது நாட்டை 'வானிலை சூழலுக்கு தயாராகும் மற்றும் பருவநிலைக்கு உகந்த' நாடாக மாற்றும் நோக்கத்துடன் 'மிஷன் மௌசம்' திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் குறிக்கோள்களை அடைவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வானிலை மற்றும் பருவநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், வானிலை மேலாண்மை மற்றும் நீண்ட காலத்திற்கான தலையீட்டை திட்டமிட உதவும் காற்றின் தரம் குறித்த தரவுகளை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும்.‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
June 12th, 04:23 pm
‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், அமைப்புகள், குஜராத் அரசின் அமைச்சகம் மற்றும் அமைப்புகளின் தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.PM chairs emergency high-level meeting to review preparedness for Cyclone Hudhud
October 11th, 08:43 pm
PM chairs emergency high-level meeting to review preparedness for Cyclone Hudhud