இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்
October 28th, 01:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 19th, 06:57 pm
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’ அக்டோபர் 19 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 18th, 11:42 am
தேசிய கற்றல் வாரம் - ‘கர்மயோகி வாரத்தை’ அக்டோபர் 19 அன்று காலை 10.30 மணி அளவில் புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.வேலைவாய்ப்பு முகாமில் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 30th, 04:30 pm
நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற இயக்கம் தொடர்கிறது. இன்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நியமனக் கடிதங்களைப் பெறுவது உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் விளைவாகும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரை
November 30th, 04:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றினார். புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை காணொலிக் காட்சி மூலம் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.You are ‘Amrit Rakshak’ of this ‘Amrit Kaal: PM Modi at Rozgar Mela
August 28th, 11:20 am
PM Modi distributed more than 51,000 appointment letters to newly inducted recruits via video conferencing. Addressing the occasion, PM Modi congratulated the new appointees for their selection as ‘Amrit Rakshak’ during the Amrit Kaal. He Called them ‘Amrit Rakshak’ as the new appointees will not only serve the country but will also protect the country and the countrymen. PM Modi emphasized the responsibility that comes with the selection of Defence or Security and Police Forces and said that the Government has been very serious about the needs of the Forces.வேலைவாய்ப்பு திருவிழாவில் 51,000 க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை பிரதமர் வழங்கினார்
August 28th, 10:43 am
புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 51,000 பேருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), சஷ்ஸதிரா சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைஃபிள்ஸ், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய பாதுகாப்பு காவல் படைகளில் (சிஏபிஎஃப்) பணியாளர்களை உள்துறை அமைச்சகம் பணியாளர்களை சேர்த்து வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி), சப்-இன்ஸ்பெக்டர் (பொதுப்பணி) மற்றும் பொதுப்பணி அல்லாத கேடர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள்.