புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 26th, 11:28 pm
பாரத மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளர், சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை, இந்த தொழிலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களை கௌரவிப்பது எனது பாக்கியம். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கிறது.புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
July 26th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஜி-20 நாணயம் மற்றும் ஜி-20 அஞ்சல்தலையை அவர் வெளியிட்டார். மாநாட்டு மையத்திற்கு ‘பாரத மண்டபம்’ என பெயர் சூட்டும் விழா ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்டதையும், அந்நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார். இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால், சுமார் 2,700 கோடி ரூபாய் செலவில் தேசிய திட்டமாக உருவாக்கப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள இந்த புதிய ஐஇசிசி வளாகம் இந்தியாவை ஒரு சர்வதேச வர்த்தக மையமாக மேம்படுத்த உதவும்.