சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை -2024, தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 15th, 10:05 am
எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 15th, 10:00 am
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 14th, 05:31 pm
அக்டோபர் 15-ம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (WTSA) 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.44-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை வகித்தார்
August 28th, 06:58 pm
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்திறன் மிக்க ஆளுமை மற்றும் உரிய நேரத்தில் அமலாக்கத்திற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 44-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை வகித்தார். அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் இது முதல் கூட்டமாகும்.43-வது பிரகதி கலந்துரையாடலுக்குப் பிரதமர் தலைமை வகித்தார்
October 25th, 09:12 pm
மத்திய, மாநில அரசுகளை உள்ளடக்கிய செயல்திறன் மிக்க ஆளுமை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முகத் தளமான பிரகதியின் 43 வது கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 22nd, 03:34 pm
விக்ரம் சம்வாத் 2080ஐ முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆறாம் தலைமுறை தொழில்நுட்ப சோதனைத்தளமும் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சம்பந்தமான நமது தொலைநோக்கு ஆவணமும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவில் புதிய ஆற்றல் ஏற்படுவதோடு, தெற்கு ஆசியா மற்றும் உலகளாவிய தெற்கு பகுதிகளுக்குத் தீர்வுகளும், புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும். இது குறிப்பாக கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
March 22nd, 12:30 pm
இந்தியாவில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஐடியு) பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார். ‘கால் பிஃபோர் யு டிக்’ செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் என்பது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஐ.நா.-வின் சிறப்பு முகமையாகும். இந்த முகமை இந்தியாவில் பகுதி அலுவலகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த அலுவலகம் இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவை புரியும். இந்த நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன், பிராந்தியத்தில் பரஸ்பர பயனுள்ள பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & புத்தாக்க மையத்தை பிரதமர் மார்ச் 22-ல் தொடங்கி வைக்கிறார்
March 21st, 04:00 pm
சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & இந்தியாவில் உள்ள புத்தாக்க மையத்தை விக்யான் பவனில் 22 மார்ச், 2023 மதியம் 12.30-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.40-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமைதாங்கினார்
May 25th, 07:29 pm
பிரகதி அமைப்பின் 40-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஒன்பது திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் இரண்டு ரயில்வே அமைச்சகத்தையும், இரண்டு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தையும், இரண்டு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தையும் சேர்ந்தவை. மற்ற இரண்டு திட்டங்களில் ஒன்று மின்சார அமைச்சகத்தையும் மற்றொன்று நீர்வளம் மற்றும் நதிநீர் மேம்பாடு, கங்கை புனரமைத்தல் துறையையும் சேர்ந்தவை.பிரதமரின் பிரகதி மூலமான கலந்துரையாடல்
November 22nd, 04:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 23வது ஒருங்கிணைந்த தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த (ஐ.சி.டி.) அடிப்படையிலான பல்முனை நிர்வாகம் மற்றும் குறித்த நேரத்தில் செயல்படுத்துவது தொடர்பான பிரகதி கலந்துரையாடல் நடைபெற்றதுThe United States and India: Enduring Global Partners in the 21st Century'...the India-US Joint Statement
June 08th, 02:26 am
Watch LIVE: Shri Narendra Modi to address the CyberMedia ICT Business Awards 2013. On 17th January, 2014
January 12th, 10:12 am
Watch LIVE: Shri Narendra Modi to address the CyberMedia ICT Business Awards 2013. On 17th January, 2014