லட்சத்தீவின் அகட்டி விமான நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 02nd, 04:45 pm
லட்சத்தீவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மட்டுப்படுத்தப்பட்டது. கப்பல் போக்குவரத்து முக்கியத் துறையாக இருந்தபோதும், துறைமுக உள்கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை. கல்வி, சுகாதாரம் முதல் பெட்ரோல், டீசல் கிடைப்பது வரை பல்வேறு துறைகளில் சவால்கள் காணப்பட்டன. எங்கள் அரசு இப்போது இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக கவனித்து வருவது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. லட்சத்தீவின் முதல் பெட்ரோல், எண்ணெய், உயவு எண்ணெய்க்கான மொத்த சேமிப்பு வசதி கவரட்டி, மினிக்காய் தீவுகளில் நிறுவப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரையாற்றினார்
January 02nd, 04:30 pm
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், லட்சத்தீவுகள் வழங்கும் மகத்தான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டதோடு, சுதந்திரத்திற்குப் பிறகு லட்சத்தீவுகள் எதிர்கொண்ட நீண்டகால புறக்கணிப்பையும் சுட்டிக்காட்டினார். கப்பல் போக்குவரத்து இப்பகுதியின் உயிர்நாடியாக இருந்தபோதிலும் பலவீனமான துறைமுக உள்கட்டமைப்பை அவர் குறிப்பிட்டார். இது கல்வி, சுகாதாரம், பெட்ரோல், டீசலுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். தற்போது அரசு அதன் அபிவிருத்திப் பணியை சரியான அக்கறையுடன் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த சவால்கள் அனைத்தும் எங்கள் அரசால் எதிர்கொள்ளப்படுகின்றன, என்று அவர் கூறினார்.