நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும் வளர்ப்பதற்கும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு போன்ற மன்றங்கள் இன்றியமையாதவை: பிரதமர்

December 08th, 09:38 pm

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சியின் ஒரு சில காட்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 08th, 06:00 pm

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள எனது நண்பர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திருமிகு டயானா கெல்லாக் அவர்களே, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, கலை உலகின் புகழ்பெற்ற நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார்

December 08th, 05:15 pm

தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை டிசம்பர் 8 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

December 07th, 02:13 pm

2023 டிசம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணியளவில் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புக் கண்காட்சி 2023- ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தையும், சாமுன்னாட்டி எனப்படும் மாணவர் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.