6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 04th, 12:59 pm

இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

April 04th, 12:54 pm

தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.

இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை

இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை

March 12th, 02:13 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்

புதுதில்லியில் நடைபெற்ற சோல் தலைமைத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 21st, 11:30 am

பூடான் பிரதமர் எனது சகோதரர் டாஷோ ஷெரிங் டோப்கே அவர்களே, சோல் நிறுவன வாரியத் தலைவர் சுதிர் மேத்தா அவர்களே, துணைத் தலைவர் ஹன்ஸ்முக் ஆதியா அவர்களே, தொழில்துறை உலகின் ஜாம்பவான்களே, தங்கள் வாழ்க்கையில், தத்தமது துறைகளில் தலைமைப் பண்பை வழங்குவதில் வெற்றி கண்டவர்களே, இதுபோன்ற பல மகத்தான மனிதர்களை நான் இங்கு காண்கிறேன். இங்கே எனது இளம் சகாக்களையும் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 21st, 11:00 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். நாட்டைக் கட்டமைப்பதில் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் தலைமைத்துவப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி வழங்கும் சோல் என்பது பெயரில் மட்டும் அல்ல, இந்தியாவின் சமூக வாழ்வியலில் ஆன்மாவாக திகழும் என்று கூறினார். இந்தப் பயிற்சி நிறுவனம் ஆன்மீக அனுபவத்தின் சாராம்சத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் நகரில் விரைவில் இந்த சோல் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

November 22nd, 03:02 am

இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

November 22nd, 03:00 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

'கர்மயோகி சப்தா' – தேசிய கற்றல் வாரத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

October 19th, 06:57 pm

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 'கர்மயோகி சப்தா' (கர்மயோகி வாரம்) – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.10.2024) தொடங்கி வைத்தார்.

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

February 03rd, 11:00 am

மதிப்புமிக்க சட்ட வல்லுநர்களே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, மதிப்பிற்குரிய பார்வையாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.

காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

February 03rd, 10:34 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நீதித்துறை மாற்றம் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள் போன்ற சட்டம் மற்றும் நீதி, நிர்வாக பொறுப்பு; மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்;

என்பிடிபிஆர் & சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்-2023-னின் 3-வது கூட்டத்தில் பிரதமரின் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

March 10th, 09:43 pm

முதலாவதாக, பேரிடர் மீட்புப்படை மற்றும் பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால், பல நேரங்களில் உங்கள் சொந்த உயிரைக் கூட பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான வேலையைச் செய்கிறீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது இரு மாநில படைகளுக்கு இன்று வழங்கப்பட்டது. புயல், சுனாமி போன்ற பல்வேறு பேரிடர்களின் போது ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் காட்டுத் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் அயராது உழைத்தது.

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 10th, 04:40 pm

பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல் ஆகும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் அளித்த பதிலுரையின் தமிழாக்கம்

February 09th, 02:15 pm

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் அவர்களுக்கு எனது பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றிய போது, ​​வளர்ந்த இந்தியாவுக்கான பார்வையையும், வளர்ந்த இந்தியாவின் தீர்மானங்களுக்கான செயல் திட்ட வரைபடத்தையும் வழங்கினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதிலுரை

February 09th, 02:00 pm

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். குடியரசுத் தலைவர் தமது உரையில் வளர்ந்த இந்தியா என்னும் தொலைநோக்கை அறிவித்து இரு அவைகளுக்கும் வழிகாட்டியுள்ளதாக பிரதமர் தமது உரையை தொடங்கினார்.

The 'Panch Pran' must be the guiding force for good governance: PM Modi

October 28th, 10:31 am

PM Modi addressed the ‘Chintan Shivir’ of Home Ministers of States. The Prime Minister emphasized the link between the law and order system and the development of the states. “It is very important for the entire law and order system to be reliable. Its trust and perception among the public are very important”, he pointed out.

PM addresses ‘Chintan Shivir’ of Home Ministers of States

October 28th, 10:30 am

PM Modi addressed the ‘Chintan Shivir’ of Home Ministers of States. The Prime Minister emphasized the link between the law and order system and the development of the states. “It is very important for the entire law and order system to be reliable. Its trust and perception among the public are very important”, he pointed out.

சரக்கு போக்குவரத்து சேவைகளில் அதிக செயல்திறனை ஊக்குவிக்கும் மத்திய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 21st, 04:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது சரக்குப் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்பை வகுத்துள்ளது. இந்தக் கொள்கை, பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தை செயல்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த கொள்கையின் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் மனித வளங்களை ஒழுங்குபடுத்தும் செயல்முறைகள், ஒழுங்குமுறை கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் செயல்திறனைக் கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை

August 02nd, 10:18 pm

இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கம்போடிய பிரதமர் மேதகு சாம்டெக் அக்கா மோஹா சேனா படேய் டெக்னோ ஹூன் சென்னுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக சந்திப்பு

May 18th, 08:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி கம்போடிய பிரதமர் மேதகு சாம்டெக் அக்கா மோஹா சேனா படேய் டெக்னோ ஹூன் சென்-ஐ இன்று காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார்.

சுகாதாரத் துறையில் மத்திய பட்ஜெட்டின் நேர்மறையான தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

February 26th, 02:08 pm

கடந்த 7 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமது சுகாதார சேவையில் நாம் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி வருகிறோம். தற்போது சுகாதாரத்தில் மட்டுமின்றி, அதற்கு சமமாக நல வாழ்விலும் கவனம் செலுத்தப்படுகிறது.