ஹூல் தினத்தை முன்னிட்டு பழங்குடியின வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

June 30th, 02:32 pm

சித்து-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற பழங்குடியின வீரர்களின் சுயமரியாதை மற்றும் அவர்கள் பிரிட்டிஷ் பேரரசின் அட்டூழியங்களுக்கு எதிராக வீரத்துடன் போராடியதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நமது பழங்குடியின சமுதாயத்தின் ஈடு இணையற்ற துணிச்சல், போராட்ட குணம் மற்றும் தியாகத்தை நினைவுகூர சிறந்த தருணம் ஹூல் தினம் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.