கர்நாடக மாநிலம் தார்வர்ட் மாவட்டம் ஹுப்பள்ளியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கிவைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 12th, 04:01 pm

ஹுப்பள்ளிக்கு இந்த ஆண்டில் ஏற்கனவே ஒருமுறை வரும் வாய்ப்பைப் பெற்றேன். ஹுப்பள்ளி சாலைகளின் இருமருங்கிலும், சகோதர, சகோதரிகள் திரண்டு என் மீது காட்டிய அளப்பரிய அன்பையும், வழங்கிய ஆசியையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது. கடந்த காலங்களில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பை நான் பெற்றேன். பெங்களூரு முதல் பெலகாவி வரை, கலாபுரகி முதல் ஷிமோகா வரை, மைசூரு முதல் துமாக்கூரு வரை கன்னட மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு அளவில்லை. உங்களது அன்புக்கும், பரிவுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கர்நாடக மாநில மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிந்து இதனை நான் திருப்பிச்செலுத்துவேன். கர்நாடகாவின் இரட்டை எஞ்சின் அரசு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டம், கிராமம் மற்றும் குக்கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகுந்த நேர்மையுடன் பாடுபடுகிறது.

கர்நாடகாவின் ஹூப்ளி-தர்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்

March 12th, 04:00 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் ஹுப்ளி-தார்வாடில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஐஐடி தார்வாட், கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்ளி நிலையத்தில் 1,507 மீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடையை நாட்டிற்கு அர்ப்பணித்தல், ஹோசப்பேட்டை - ஹூப்ளி - தினைகாட் வழித்தடத்தை மின்மயமாக்கல் மற்றும் ஹோசப்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். ஹூப்ளி-தர்வாட் ஸ்மார்ட் சிட்டியில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜெயதேவா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தார்வாட் பல கிராம குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் துப்பரிஹல்லா வெள்ள சேதக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மார்ச் 12 ஆம் தேதி கர்நாடகாவின் மாண்டியா மற்றும் ஹூப்பளி – தார்வாடாவுக்குச் செல்கிறார் பிரதமர்

March 10th, 01:14 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மார்ச் 12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்குச் செல்கிறார். அங்கு அவர் ரூ.16,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு மாண்டியாவில் முக்கிய சாலைத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். அதன் பின்னர் பிற்பகல் 3.15 க்கு ஹூப்பளி – தார்வாடாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

கர்நாடகாவின் ஹூப்பாளியில் 26-ஆவது தேசிய இளைஞர் திருவிழாவில் பிரதமரின் துவக்க உரை

January 12th, 04:30 pm

2023-ஆம் ஆண்டின் தேசிய இளைஞர் தினம் மிகவும் சிறப்புமிக்கது. ஒருபுறம் தேசிய இளைஞர் திருவிழா, மறுபுறம் விடுதலையின் அமிர்த பெருவிழா. “எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே”. விவேகானந்தரின் இந்த முழக்கம்தான் இந்திய இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த அமிர்த காலத்தில் நமது கடமைகளைப் புரிந்து கொண்டு அதனை நோக்கி நம் நாட்டை வழி நடத்த வேண்டும். இளைஞர் சக்தியில் கவனம் செலுத்தும்போது ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி சுலபமானதாகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார்.

25வது தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை கர்நாடக மாநிலம் ஹூப்பாளியில் பிரதமர் தொடங்கிவைத்தார்

January 12th, 04:00 pm

கர்நாடக மாநிலத்தின் ஹூப்பாளியில் 26-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இளைஞர் திருவிழாவிற்கு, முன்னேற்றம் அடைந்த இளைஞர்களால் வளர்ச்சியடையும் இந்தியா என்பதே கருப்பொருளாக இருந்தது.