வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரை
May 29th, 06:45 pm
இன்று, ஜெகநாதரின் ஆசியுடன், நாட்டின் விவசாயிகளுக்காக ஒரு பெரிய இயக்கம் தொடங்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது ஒரு தனித்துவமான முயற்சியாகும். பருவமழை நெருங்கி வருகிறது, காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட குழுக்கள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்குச் செல்ல உள்ளன. இந்தக் குழுக்கள் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்க உள்ளனர். இந்தப் பிரமாண்டமான இயக்கம், இந்த லட்சியத் திட்டம் மற்றும் இந்திய விவசாயத்தின் அடித்தளமாக பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றுக்காக நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்
May 29th, 06:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மனதின் குரல் (122ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25-05-2025
May 25th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது. நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேயாக வேண்டும், இதுதான் இன்று அனைத்து இந்தியர்களின் உறுதிப்பாடு. நண்பர்களே, ஆப்பரேஷன் சிந்தூரின் போது, நமது படைகள் வெளிப்படுத்திய பராக்கிரமம், இந்தியர்கள் அனைவரின் தலைகளையும் பெருமையில் உயர்த்தியது. நமது படையினர் கையாண்ட துல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதல் காரணமாக எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்கள் நாசம் செய்யப்பட்டன, இது அற்புதமான விஷயம். ஆப்பரேஷன் சிந்தூர், உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் புதியதொரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.நமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 31st, 11:30 am
நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.