2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

December 13th, 10:21 am

2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

December 11th, 10:27 am

கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

December 06th, 09:27 am

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹதாப் இந்திய சுதந்திரத்திற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவ வாழ்க்கையை உறுதி செய்வதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச் சிறந்த ஆளுமை: பிரதமர்

November 22nd, 03:11 am

இந்தியாவை விடுதலையடையச் செய்வதற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச் சிறந்த ஆளுமை டாக்டர் ஹரேகிருஷ்ணா மகதாப் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். அவரது 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ள திரு மோடி, டாக்டர் மஹ்தாப்பின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்திய வருகை நினைவுச் சின்னத்தை பிரதமர் பார்வையிட்டார்

November 21st, 10:00 pm

ஜார்ஜ்டவுனில் உள்ள நினைவுச் சின்னத் தோட்டத்தில் உள்ள இந்திய வருகைச் சின்னத்தை பிரதமர் இன்று பார்வையிட்டார். அவருடன் கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் பிலிப்ஸும் சென்றார். வருகை நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமரை தாஸ்ஸா டிரம்ஸ் இசைக் குழுவினர் வரவேற்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்களின் போராட்டம் மற்றும் தியாகங்களையும், கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நினைவுச்சின்னத்தில் பெல் பத்ரா மரக்கன்றை அவர் நட்டார்.

மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 21st, 09:57 pm

கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரோமினேட் கார்டனில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மகாத்மா காந்தியின் மாண்புகளை அவர் நினைவு கூர்ந்தார். 1969-ஆம் ஆண்டில் காந்திஜியின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.

ஸ்ரீ பாலாசாகேப் தாக்கரேவின் நினைவு தினத்தில் அவருக்கு பிரதமர் மரியாதை

November 17th, 01:22 pm

பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாராஷ்டிராவின் வளர்ச்சி மற்றும் மராத்தி மக்களின் அதிகாரமளித்தலுக்காக பாடுபட்ட ஒரு தொலைநோக்கு பார்வையாளராக ஸ்ரீ தாக்கரே திகழ்ந்ததாக திரு மோடி பாராட்டியுள்ளார்.

போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

November 15th, 11:04 pm

போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 14th, 08:52 am

முன்னாள் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

October 08th, 02:52 pm

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு ராம் விலாஸ் ஒரு சிறந்த தலைவர் என்றும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க முழுமையாக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜுக்கு பிரதமர் மரியாதை

October 05th, 02:41 pm

துறவி ஸ்ரீ சேவாலால் ஜி மகராஜின் சமாதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் கலங்கரை விளக்கம் என்று திரு மோடி அவரைப் பாராட்டினார்.

PM Modi pays homage at Gandhi statue in Kyiv

August 23rd, 03:25 pm

Prime Minister Modi paid homage to Mahatma Gandhi in Kyiv. The PM underscored the timeless relevance of Mahatma Gandhi’s message of peace in building a harmonious society. He noted that the path shown by him offered solutions to present day global challenges.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்

August 09th, 08:58 am

மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த காணொளியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜூலை 26 அன்று பிரதமர் கார்கில் பயணம் மேற்கொள்கிறார்

July 25th, 10:28 am

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மெய்நிகர் வடிவில் தொடங்கிவைப்பார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்டதை நினைவூட்டுவதாக ‘அரசியல் சாசன படுகொலை தினம்’ அமையும்: பிரதமர்

July 12th, 05:06 pm

ஜூன் 25-ஆம் தேதியை அரசியல் சாசனப் படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) அறிவிப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் நசுக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவதாக இந்த தினம் அமையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

July 04th, 09:44 am

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர்

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

March 05th, 09:44 am

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த பிஜு பட்நாயக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

February 14th, 11:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2019-ம் ஆண்டில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

December 11th, 10:41 am

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

December 06th, 08:19 am

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.