The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.யானைகளைப் பாதுகாக்கும் சமூக முயற்சிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு
August 12th, 09:30 am
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு சமூக முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். யானைகள் செழித்து வளர உகந்த வாழ்விடத்தை உறுதி செய்ய சாத்தியமான அனைத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் திரு மோடி மீண்டும் தெரிவித்துள்ளார்.India's heritage is not just a history. India's heritage is also a science: PM Modi
July 21st, 07:45 pm
PM Modi inaugurated the 46th session of the World Heritage Committee at Bharat Mandapam in New Delhi. On this occasion, he remarked that India's history and civilization are far more ancient and expansive than commonly perceived. The Prime Minister emphasized that Development along with Heritage is India's vision, and over the past decade, the government has taken unprecedented steps for the preservation of heritage.புதுதில்லி பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
July 21st, 07:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கூடும் உலகப் பாரம்பரியக் குழு, உலகப் பாரம்பரியம் குறித்த அனைத்து விஷயங்களை நிர்வகிப்பதற்கும், உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பேற்கும். இந்தியா முதல் முறையாக உலகப் பாரம்பரிய குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு கண்காட்சிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.ஆஸ்திரிய இந்தியவியலாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
July 10th, 09:47 pm
இந்திய வரலாறு குறித்த நான்கு முன்னணி ஆஸ்திரிய இந்தியவியலாளர்கள் மற்றும் அறிஞர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பௌத்த தத்துவ அறிஞரும் மொழியியலாளருமான டாக்டர் பிர்கிட் கெல்னர், நவீன தெற்காசியாவின் அறிஞர் பேராசிரியர் மார்ட்டின் கென்ஸ்லே, வியன்னா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் டாக்டர் போரயின் லாரியோஸ் மற்றும் வியன்னா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறைத் தலைவர் டாக்டர் கரின் ப்ரீசென்டான்ஸ்.ஆகியோருடன் அவர் உரையாடினார்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர் திரு நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 22nd, 05:12 pm
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
January 22nd, 01:34 pm
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகம் வெளியீடு குறித்த பிரதமரின் காணொலி செய்தி
January 18th, 02:10 pm
ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்
January 18th, 02:00 pm
ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.வீரப்புதல்வர் தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 26th, 12:03 pm
இன்று, தைரியமான சாஹிப்சாதாக்களின் தியாகத்தை தேசம் நினைவுகூர்கிறது. அவர்களின் அசைக்க முடியாத உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வீரப் புதல்வர் தினத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது முழு தேசமும் சாஹிப்சாதாக்களின் வீரக் கதைகளால் உத்வேகம் பெற்றது.'வீரப் புதல்வர்கள் தின' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
December 26th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
December 25th, 04:31 pm
எனது அமைச்சரவை சகாக்கள் திரு அனுராக் தாக்கூர் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, எனது நீண்டகால நண்பரும் மஹாமனா சம்பூர்ண வங்கமே பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ராம் பகதூர் ராய் அவர்களே, மகாமனா மாளவியா மிஷனின் தலைவர் பிரபு நாராயண் ஸ்ரீவஸ்தவ் அவர்களே, இங்கு உள்ள அனைத்து புகழ்பெற்ற ஆளுமைகளே!பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படைப்புகள் அடங்கிய தொகுப்பைப் பிரதமர் வெளியிட்டார்
December 25th, 04:30 pm
பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் 162-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 'பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகள்' என்ற 11 பகுதிகள் அடங்கிய முதல் தொகுப்பை வெளியிட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவிடத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன் மோகன் மாளவியா நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த அளப்பரிய பாடுபட்ட சிறந்த அறிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானின் தீரத்திற்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
November 24th, 05:35 pm
லச்சித் தினமான இன்று, லச்சித் போர்புகானின் தைரியத்தை நாம் நினைவுகூர்கிறோம் என்று திரு. மோடி கூறியுள்ளார். சராய்கட் போரில் அவரது அசாதாரணமான தலைமை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அவரது பாரம்பரியம் நமது வரலாற்றை வடிவமைத்த வீரம் மற்றும் உத்திபூர்வமான மதிநுட்பம் காலத்தால் அழியாத சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.PM Modi interacts with the Indian community in Paris
July 13th, 11:05 pm
PM Modi interacted with the Indian diaspora in France. He highlighted the multi-faceted linkages between India and France. He appreciated the role of Indian community in bolstering the ties between both the countries.The PM also mentioned the strides being made by India in different domains and invited the diaspora members to explore opportunities of investing in India.புதுதில்லியில் கடமைப்பாதையின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 08th, 10:41 pm
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் எனது அமைச்சரவை நண்பர்களான திரு ஹர்தீப் சிங் புரி, திரு ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேகவால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் திரு கௌசல் கிஷோர் ஆகியோர் இந்த மேடையில் உள்ளனர்.PM inaugurates 'Kartavya Path' and unveils the statue of Netaji Subhas Chandra Bose at India Gate
September 08th, 07:00 pm
PM Modi inaugurated Kartavya Path and unveiled the statue of Netaji Subhas Chandra Bose. Kingsway i.e. Rajpath, the symbol of colonialism, has become a matter of history from today and has been erased forever. Today a new history has been created in the form of Kartavya Path, he said.