கனடாவில் இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
November 04th, 08:34 pm
கனடாவில் உள்ள இந்து ஆலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்குகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவின் உறுதியான தீர்மானத்தை வலியுறுத்திய அவர், கனடா அரசு, நீதி மற்றும் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.