பிரதமர் மோடியின் தலைமை மலேரியாவுக்கு எதிராக பிரமிக்க வைக்கும் வெற்றியை அளித்துள்ளது, சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது: ஜேபி நட்டா

December 16th, 10:06 am

2017ல் 6.4 மில்லியனாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 2023ல் வெறும் 2 மில்லியனாக மலேரியா நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் 69% குறைப்பை இந்தியா அடைந்துள்ளது. இந்த வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடியின் கவனமுள்ள கொள்கை மற்றும் தலைமைக்குக் கிடைத்த பரிசாகும். 2015 கிழக்காசிய உச்சி மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதற்கான பிரதமர் மோடியின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் உள்ளது.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 29th, 01:28 pm

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!

சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

October 29th, 01:00 pm

தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

We will leave no stone unturned in fulfilling people’s aspirations: PM Modi in Bhubaneswar, Odisha

September 17th, 12:26 pm

PM Modi launched Odisha's 'SUBHADRA' scheme for over 1 crore women and initiated significant development projects including railways and highways worth ₹3800 crore. He also highlighted the completion of 100 days of the BJP government, showcasing achievements in housing, women's empowerment, and infrastructure. The PM stressed the importance of unity and cautioned against pisive forces.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமான 'சுபத்ரா' திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

September 17th, 12:24 pm

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா' திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.09.2024) தொடங்கி வைத்தார். இது பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமாகும். மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.2800 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய திரு நரேந்திர மோடி , ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 14 மாநிலங்களில் பிரதமரின் கிராம்பபுற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 10 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவியை பிரதமர் விடுவித்தார். நாடு முழுவதும் இருந்து வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப் பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளையும் அவர் வழங்கினார். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்பு, பிரதமரின் நகர்ப்புற நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான ஆவாஸ் + 2004 (Awaas+ 2024) செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

புருனே சுல்தான் அளித்த விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 04th, 12:32 pm

எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் புருனே சுல்தானுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இங்கு எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும், நமது இருநாடுகளுக்கு இடையேயான நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை எனக்கு நினைவுபடுத்துகின்றன.

Reform, Perform and Transform has been our mantra: PM Modi at the ET World Leaders’ Forum

August 31st, 10:39 pm

Prime Minister Narendra Modi addressed the Economic Times World Leaders Forum. He remarked that India is writing a new success story today and the impact of reforms can be witnessed through the performance of the economy. He emphasized that India has at times performed better than expectations.

புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

August 31st, 10:13 pm

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா இன்று ஒரு புதிய வெற்றிக் கதையை எழுதி வருவதாகவும், சீர்திருத்தங்களின் தாக்கத்தை பொருளாதாரத்தின் செயல்திறன் மூலம் காண முடியும் என்றும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 90 சதவீத வளர்ச்சியையும், உலகப் பொருளாதாரம் 35 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

August 15th, 03:04 pm

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 15th, 01:09 pm

நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

இந்தியா 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:30 am

78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 09th, 11:35 am

மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், வெளிநாடுவாழ் இந்தியர்களுடனான எனது முதல் கலந்துரையாடல் இங்கே மாஸ்கோவில் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ரஷ்யாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

July 09th, 11:30 am

மாஸ்கோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவரை அங்கிருந்தவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

Congress’s philosophy is ‘Loot, Zindagi ke Saath bhi, Zindagi ke Baad bhi: PM Modi in Goa

April 27th, 08:01 pm

Ahead of the Lok Sabha elections in 2024, PM Modi addressed a powerful rally amid a gigantic crowd greeting him in South Goa. He said that owing to the two phases of voting, the ground-level feedback resonates with only one belief, ‘Fir ek Baar Modi Sarkar.’

PM Modi attends public meeting in South Goa

April 27th, 08:00 pm

Ahead of the Lok Sabha elections in 2024, PM Modi addressed a powerful rally amid a gigantic crowd greeting him in South Goa. He said that owing to the two phases of voting, the ground-level feedback resonates with only one belief, ‘Fir ek Baar Modi Sarkar.’

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 01:50 pm

எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்துள்ளீர்கள். இதற்கு தலை தாழ்ந்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் மக்களின் இந்த அன்பும், பிணைப்பும் எனது மிகப்பெரிய சொத்து. இன்று, அசாம் மக்களுக்காக 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் பெட்ரோலியம் தொடர்பானவை. இந்தத் திட்டங்கள் அசாமின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அசாம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ. 17,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

March 09th, 01:14 pm

அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில் மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளை உள்ளடக்கியது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

February 25th, 07:52 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் பிற பிரமுகர்களே, ராஜ்கோட்டின் எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

February 25th, 04:48 pm

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், சாலை, ரயில், எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலா போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கியவை.

வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 24th, 12:31 pm

சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அவர்களே, சத்தீஸ்கரின் அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, சத்தீஸ்கர் மக்களே! மாநிலத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் திரண்டிருக்கும் என் அன்பு குடும்ப உறுப்பினர்களே! சத்தீஸ்கரின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூடியிருக்கும் லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை முதலில் நான் வாழ்த்துகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்துள்ளீர்கள். உங்களது ஆசீர்வாதங்களின் விளைவாக இன்று நாங்கள் உங்கள் மத்தியில் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் என்ற தீர்மானத்துடன் கூடியுள்ளோம்.