அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்டப் பணிகள், சூரத் மெட்ரோ திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

January 18th, 10:30 am

உத்தராயன் தொடக்க தினமான இன்று, அகமதாபாத், சூரத் நகரங்களுக்கு மிக முக்கியப் பரிசு கிடைத்துள்ளது. நாட்டின் இரு பெரும் வர்த்தக மையங்களான அகமதாபாத் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள், இவ்விரு நகரங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். கெவாடியாவிற்கு, நேற்று புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, அகமதாபாதிலிருந்து கெவாடியாவிற்கு, அதிநவீன ஜன்-சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதை முன்னிட்டு, குஜராத் மக்களைப் பாராட்டுவதோடு, எனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது கட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் பூமி பூஜை செய்தார்

January 18th, 10:30 am

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர், மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஹாஜிராவில் ரோ-பாக்ஸ் முனைய தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

November 08th, 10:51 am

ஒரு திட்டத்தைத் தொடங்குவதால், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை எப்படி மேம்படும் என்பதற்கும், வாழ்க்கையின் வசதி எவ்வாறு உயரும் என்பதற்கும் இது உதாரணமாக உள்ளது. புனித யாத்திரை, நேரம் மிச்சமாகுதல், விவசாய உற்பத்தி இழப்பு குறைதல், சூரத் சந்தைக்கு காய்கறிகள், கனிகளை கொண்டு செல்லுதல் ஆகிய பயன்கள் இதன் மூலம் கிடைக்கும். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என எல்லோருக்கும் இதனால் பயன் கிடைக்கும்.

ஹசீராவில், ரோ-பாக்ஸ் முனையத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

November 08th, 10:50 am

குஜராத்தின், ரோ–பாக்ஸ் முனையத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஹசீரா மற்றும் கோகா இடையேயான ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்தையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். உள்ளூர் பயன்பாட்டாளர்களிடமும் அவர் கலந்துரையாடினார். கப்பல்துறையின் பெயரும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை என மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.

வரும் நவம்பர் எட்டாம் தேதியன்று ஹசிராவில் ரோ-பாக்ஸ் முனையத்தை திறந்து வைத்து, ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே ரோ-பாக்ஸ் படகு சேவையையும் துவக்கி வைக்கிறார் பிரதமர்

November 06th, 03:41 pm

100 மீட்டர்கள் நீளம் மற்றும் 100 மீட்டர்கள் அகலத்தோடு ரோ-பாக்ஸ் முனையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவு சுமார் ரூ 25 கோடியாகும். நிர்வாக அலுவலகக் கட்டிடம், வாகனங்களை நிறுத்துமிடம், துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.