'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்' நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரை

March 13th, 11:30 am

வரலாற்றை உருவாக்குவதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைப்பதற்கும் நாம் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ள இன்றைய தினம் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது. செமிகண்டக்டர் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் தோலேரா, சனந்த் மற்றும் அசாமில் உள்ள மோரிகான் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்த செமிகண்டக்டர் உற்பத்தி இத்துறையில் உலகளாவிய மையமாக பாரதத்தை நிலைநிறுத்த பங்களிக்கும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, மகத்துவமான தொடக்கமாகவும், தீர்க்கமான முன்னோக்கிய அடி எடுத்து வைக்கும் இந்த மகத்தான முன்முயற்சிக்காகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தைவானைச் சேர்ந்த நமது நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதத்தின் இந்த முயற்சிகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன!

'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்

March 13th, 11:12 am

'இந்தியாவின் தொழில்நுட்பம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்' நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் திட்டங்களுக்கு இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். குஜராத்தின் தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை, அசாம் மாநிலம் மோரிகானில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை தொழிற்சாலை, குஜராத் மாநிலம் சனந்தில் அவுட்சோர்சிங் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் சோதனை தொழிற்சாலை ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்ட வசதிகளாகும்.

7-வது இந்திய மொபைல் மாநாடு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 27th, 10:56 am

இந்தியா மொபைல் மாநாட்டின் ஏழாவது பதிப்பில் உங்களுடன் பங்கேற்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். 21-ஆம் நூற்றாண்டின் வேகமாக மாறிவரும் உலகில், இந்த நிகழ்வு லட்சக் கணக்கானவர்களின் இயங்குநிலையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் நாம் எதிர்காலத்தைப் பற்றிப் பேசினோம், அது அடுத்த தசாப்தம் அல்லது 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அடுத்த நூற்றாண்டைக் குறிக்கிறது. ஆனால், இன்று, ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றங்களால், ‘எதிர்காலம், இங்கேயும், இப்போதும் உள்ளது’ என்று சொல்கிறோம். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், இணைப்பு, 6ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன்கள், விண்வெளித் துறை, ஆழ்கடல் ஆய்வு, பசுமை தொழில்நுட்பம் அல்லது பிற துறைகளாக இருந்தாலும், வரவிருக்கும் காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இளைய தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்துகிறார்கள், நமது தொழில்நுட்ப புரட்சியை வழிநடத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம்.

7-வது இந்திய மொபைல் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

October 27th, 10:35 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.10.2023) தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு 2023 அக்டோபர் 27 முதல் 29 வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.

தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

May 17th, 03:59 pm

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.