'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் பயணம்: உலகளாவிய தாக்கத்தின் 15 ஆண்டுகள்
September 27th, 11:29 pm
யூடியூப் ரசிகர்கள் திருவிழா இந்தியா 2023 இல் சக யூடியூபர்களுக்கான காணொலி உரையூடியூப் ஃபேன்ஃபெஸ்ட் இந்தியா 2023 நிகழ்ச்சியில் யூடியூபர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
September 27th, 11:23 pm
யூடியூப் ஃபேன்ஃபெஸ்ட் இந்தியா 2023 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று யூடியூப் பதிவர்களிடையே உரையாற்றினார். யூடியூபில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர், இந்த ஊடகத்தின் மூலம் உலகளாவிய தாக்கத்தை உருவாக்கும் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.யஷோபூமியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 17th, 06:08 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் இந்த அற்புதமான கட்டிடத்தில் கூடியுள்ள அன்பான சகோதர சகோதரிகளே, 70 க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த திட்டத்தில் இணைந்த எனது சக குடிமக்களே, இதர சிறப்பு விருந்தினர்களே எனது குடும்ப உறுப்பினர்களே!இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான யசோபூமியை புதுதில்லியில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 17th, 12:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் கட்டமான 'யசோபூமி'யை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'யசோபூமி' ஒரு அற்புதமான மாநாட்டு மையம், பல கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான 'பி.எம் விஸ்வகர்மா திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா லோகோ, டேக்லைன் மற்றும் போர்ட்டலையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத் தாள், உபகரண கையேடு மற்றும் வீடியோவையும் அவர் வெளியிட்டார். 18 பயனாளிகளுக்கு விஸ்வகர்மா சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 07th, 04:16 pm
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரத மண்டபம் பிரமாண்டமாக திறக்கப்பட்டது. உங்களில் சிலர் முன்பு இங்கு வந்து உங்கள் விற்பனையகங்களை அமைப்பது உண்டு. இன்று நீங்கள் இங்கு உருமாறியிருக்கும் தேசத்தை பார்த்திருப்பீர்கள். இன்று இந்த பாரத மண்டபத்தில் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. பாரத மண்டபத்தின் இந்த பிரமாண்டத்திலும், இந்தியாவின் கைத்தறித் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்டைய காலமும் நவீனமும் கலந்த இந்த சங்கமம் இன்றைய இந்தியாவை வரையறுக்கிறது. இன்றைய இந்தியா உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், அதை உலகளாவியதாக மாற்றுவதற்கான உலகளாவிய தளத்தையும் வழங்குகிறது.புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
August 07th, 12:30 pm
புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய கைத்தறி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஆடைவடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்களின் களஞ்சியம்' என்ற தளத்தை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்ட பிரதமர், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்
November 17th, 03:36 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
September 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.Those who do politics of short-cut never build new airports, highways, medical colleges: PM
July 12th, 03:56 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Deoghar, Jharkhand. PM Modi started his address by recognising the enthusiasm of people. PM Modi said, “The way you have welcomed the festival of development with thousands of diyas, it is wonderful. I am experiencing the same enthusiasm here as well.”PM Modi addresses public meeting in Deoghar, Jharkhand
July 12th, 03:54 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Deoghar, Jharkhand. PM Modi started his address by recognising the enthusiasm of people. PM Modi said, “The way you have welcomed the festival of development with thousands of diyas, it is wonderful. I am experiencing the same enthusiasm here as well.”மணிப்பூரின் 50-வது மாநில தினத்தன்று பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
January 21st, 10:31 am
மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதையொட்டி உரையாற்றிய அவர், இம்மாநிலத்தின் ஒளிமயமான பயணத்திற்கு அளப்பரிய பங்காற்றி, தியாகம் புரிந்துள்ள அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார். மணிப்புரி மக்களின் வரலாற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது அவர்களின் புத்தெழுச்சி மற்றும் ஒற்றுமைதான் அவர்களது உண்மையான வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார். இம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிதான் மக்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும், மாநிலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வழிவகுப்பதாக கூறினார். தாங்கள் விரும்பும் அமைதியை மணிப்புரி மக்கள் அடைவார்கள் என்றும் அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். “முழு அடைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளிலிருந்து மணிப்பூர் விடுதலை பெற்று அமைதியாக திகழ வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரை
January 21st, 10:30 am
மணிப்பூரின் 50-வது மாநில தினத்தையொட்டி மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதையொட்டி உரையாற்றிய அவர், இம்மாநிலத்தின் ஒளிமயமான பயணத்திற்கு அளப்பரிய பங்காற்றி, தியாகம் புரிந்துள்ள அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார். மணிப்புரி மக்களின் வரலாற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின்போது அவர்களின் புத்தெழுச்சி மற்றும் ஒற்றுமைதான் அவர்களது உண்மையான வலிமை என்றும் அவர் குறிப்பிட்டார். இம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிதான் மக்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ளவும், மாநிலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வழிவகுப்பதாக கூறினார். தாங்கள் விரும்பும் அமைதியை மணிப்புரி மக்கள் அடைவார்கள் என்றும் அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார். “முழு அடைப்புகள் மற்றும் போக்குவரத்துத் தடைகளிலிருந்து மணிப்பூர் விடுதலை பெற்று அமைதியாக திகழ வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.புதிய தொழில் முனைவோருடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்
January 15th, 04:31 pm
எனது அமைச்சரவை தோழர்கள் திரு பியூஷ் கோயல் ,டாக்டர் மன்சுக் மாண்டவியா ,திரு அஸ்வினி வைஷ்ணவ் ,திரு சர்பானந்த சோனாவால் ,திரு புருஷோத்தம் ரூபாலா ,திரு ஜி கிஷன் ரெட்டி ,திரு பசுபதி குமார் பரஸ் ,டாக்டர் ஜிதேந்திர சிங் ,திரு ஸோம் பர்காஷ் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.PM Modi's interaction with Start-ups from across the country
January 15th, 11:20 am
Prime Minister Narendra Modi interacted with Startups via video conferencing. He announced that every year 16th January would be marked as the National Start-up Day to celebrate the achievements of the start-ups across the country. Start-ups would be the backbone of new India, the PM added.Bhagwan Birsa lived for the society, sacrificed life for his culture and the country: PM
November 15th, 09:46 am
Prime Minister Narendra Modi inaugurated Bhagwan Birsa Munda Memorial Udyan cum Freedom Fighter Museum at Ranchi via video conferencing. He said, “This museum will become a living venue of our tribal culture full of persity, depicting the contribution of tribal heroes and heroines in the freedom struggle.”பழங்குடியினர் கௌரவ தினத்தன்று ராஞ்சியில், பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
November 15th, 09:45 am
பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா நினைவுத் தோட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநில ஆளுனர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஸ்ரீநகர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி
November 08th, 10:55 pm
தன் கைவினை மற்றும் நாட்டுப்புற கலைக்கு சிறப்புக் குறிப்புடன், ஸ்ரீநகர், யுனெஸ்கோவின் படைப்பாற்றல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இணைந்திருப்பதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசிய கொடிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்
October 03rd, 06:05 pm
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப் பெரிய அளவிலான காதி தேசியக் கொடியை (225 அடி நீளமும், 150 அடி அகலமும்) பறக்க விட்ட காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் முயற்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.