பிரதமருடன் கம்போடியா மன்னர் நரோடோம் சிஹாமோனி சந்திப்பு
May 30th, 08:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை, கம்போடியா மன்னர் நரோடோம் சிஹாமோனி இன்று (மே 30, 2023) சந்தித்துப் பேசினார். கம்போடியா மன்னர் நரோடோம் சிஹாமோனி மே 29 ஆம் தேதி முதல் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.