போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
August 21st, 09:07 am
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, போலந்து அதிபர் திரு ஆன்ட்ரஸெஜ் துடா ஆகியோர் இடையிலான தொலைபேசி உரையாடல்
March 01st, 10:45 pm
உக்ரைனிலுள்ள இந்தியர்கள் இடம் பெயர்ந்து வரும்போது அவர்களுக்கு விசா தளர்வுகள் அளித்து, அவர்கள் இந்தியா திரும்ப உதவியதற்காக போலந்து அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த கடினமான சூழ்நிலையில் போலந்து மக்கள் இந்தியர்களிடம் காட்டிய அன்புக்கும் அவர் நன்றியை தெரிவித்தார்.