ஹரியானா மாநிலம் ரேவாரியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 16th, 01:50 pm
வீர பூமியான ரேவாரியிலிருந்து ஹரியானா முழுமைக்கும் ராம் ராம்! ரேவாரி செல்லும் போதெல்லாம் பல பழைய நினைவுகள் மீண்டும் பசுமையாகின்றன. ரேவாரியுடனான எனது தொடர்பு எப்போதும் தனித்துவமானது. ரேவாரி மக்கள் மோடியை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எனது நண்பர் ராவ் இந்தர்ஜித் அவர்களும் முதலமைச்சர் மனோகர் லால் அவர்களும் என்னிடம் கூறியதைப் போல, 2013 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, எனது முதல் நிகழ்ச்சி ரேவாரியில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ரேவாரி எனக்கு 272 க்கும் மேற்பட்ட இடங்களை ஆசீர்வதித்தது. உங்கள் ஆசீர்வாதம் வெற்றியாக மாறியது.ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரூ.9,750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 16th, 01:10 pm
ஹரியானா மாநிலம் ரேவாரியில் இன்று ரூ.9750 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நிறைவேறிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். நகர்ப்புறப் போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலா தொடர்பான பல முக்கியத் துறைகளை இந்தத் திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நிகழ்ச்சியையொட்டி கண்காட்சிகளையும் திரு மோடி பார்வையிட்டார்.பிப்ரவரி 16 அன்று பிரதமர் ரேவாரிக்கு பயணம் மேற்கொள்கிறார்
February 15th, 03:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 16, 2024) ஹரியானாவின் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:15 மணியளவில், நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான ரூ. 9750 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.