Today, be it major nations or global platforms, the confidence in India is stronger than ever: PM at ET Summit
February 15th, 08:30 pm
PM Modi, while addressing the ET Now Global Business Summit 2025, highlighted India’s rapid economic growth and reforms. He emphasized India’s rise as a global economic leader, crediting transformative policies like the SVAMITVA Yojana and banking reforms. He stressed the importance of a positive mindset, swift justice, and ease of doing business, reaffirming India's commitment to Viksit Bharat.PM Modi addresses the ET Now Global Business Summit 2025
February 15th, 08:00 pm
PM Modi, while addressing the ET Now Global Business Summit 2025, highlighted India’s rapid economic growth and reforms. He emphasized India’s rise as a global economic leader, crediting transformative policies like the SVAMITVA Yojana and banking reforms. He stressed the importance of a positive mindset, swift justice, and ease of doing business, reaffirming India's commitment to Viksit Bharat.Cabinet approves revised ethanol procurement mechanism and prices for Public Sector OMCs
January 29th, 03:04 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the revision of ethanol procurement prices for Public Sector OMCs under the Ethanol Blended Petrol Programme for Ethanol Supply Year 2024-25 (Nov 1, 2024 – Oct 31, 2025). The ex-mill price of ethanol from C Heavy Molasses has been increased from Rs. 56.58 to Rs. 57.97 per litre."மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின்" வெற்றிகரமான அமல்படுத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 03rd, 12:15 pm
மத்திய அமைச்சரவையின் எனது நண்பர் திரு. அமித் ஷா அவர்களே, சண்டிகர் நிர்வாகி திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சந்து அவர்களே, ஏனைய பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 03rd, 11:47 am
இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி சண்டிகரில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, சண்டிகரின் அடையாளம், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டும் சக்தி வடிவமான அன்னை சண்டி தேவியுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் முழு வடிவத்திற்கும் இதே தத்துவம்தான் அடிப்படை என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் உத்வேகம் பெற்று இந்திய நியாயச் சட்டம் அமலுக்கு வந்திருப்பது, வளர்ச்சியடைந்த இந்தியா உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கட்டத்தில் நாடு உள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நிறைவு செய்ததை நினைவுகூரும் முக்கியமான தருணம் என்று பிரதமர் கூறினார். நாட்டின் மக்களுக்காக நமது அரசியலமைப்பு வகுத்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார். சட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் இப்போதுதான் பார்த்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சட்டங்களின் நேரடி செயல்விளக்கக் காட்சியை பார்வையிடுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் அவர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகத்தின் அனைத்து பங்குதாரர்களையும் அவர் பாராட்டினார்.உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 09th, 11:00 am
உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
November 09th, 10:40 am
உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத்தின் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:31 am
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வும் ஒட்டுமொத்த தேசத்தையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய ஒற்றுமை தினத்தன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
October 31st, 07:30 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற ஒருமைப்பாட்டு தின அணிவகுப்பையும் திரு மோடி பார்வையிட்டார்.PM Modi attends News18 Rising Bharat Summit
March 20th, 08:00 pm
Prime Minister Narendra Modi attended and addressed News 18 Rising Bharat Summit. At this time, the heat of the election is at its peak. The dates have been announced. Many people have expressed their opinions in this summit of yours. The atmosphere is set for debate. And this is the beauty of democracy. Election campaigning is in full swing in the country. The government is keeping a report card for its 10-year performance. We are charting the roadmap for the next 25 years. And planning the first 100 days of our third term, said PM Modi.