விண்வெளி அளவுக்கு ஒத்துழைப்பு!
May 05th, 11:00 pm
செளத் ஏசியன் கோப்பரேஷன் வலுவான தாக்கத்தை பெற்ற தினமான 5 மே 2017 அன்று வரலாற்றில் பதிவானது. அன்றைய தினம் தான், இந்தியா இரண்டு வருடங்களுக்கு முன்பு உறுதி செய்த அர்ப்பணிப்பை, செளத் ஏசியா சாட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம்: பிரதமர்
May 05th, 06:38 pm
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெற்காசியா செயற்கைக்கோள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டதில் தெற்காசிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் அவர்கள் அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம், என்று கூறினார்.விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்: தெற்காசியா செயற்கைக்கோள் வெளியீட்டில் பிரதமர்
May 05th, 04:02 pm
தெற்காசியா செயற்கைக்கோளை வெளியீட்டை வரலாற்றாக கருதி ISRO-விற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் அவர் செயற்கைக்கோள் தொலைதூர பகுதிகளில் பயனுள்ள தகவல் தொடர்பு, சிறந்த ஆட்சி, சிறந்த வங்கி சேவைகள் மற்றும் சிறந்த கல்வி அடைவதற்கு உதவும் என்று கூறினார். தெற்காசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாக இணைவது முன்னணியில் நம்முடைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நம்முடைய அசைக்க முடியாத தீர்மானத்தின் அடையாளமாகும்,” என்றார்.