PM to visit Andhra Pradesh and Odisha on 8th-9th January
January 06th, 06:29 pm
Prime Minister Shri Narendra Modi will visit Andhra Pradesh and Odisha on a two day tour from 8th-9th January 2025. In a major push for sustainable development, industrial growth and infrastructure enhancement, Prime Minister will dedicate to the nation, inaugurate and lay the foundation stone of projects worth over Rs. 2 Lakh Crore at Visakhapatnam on 8th January at 5:30 PM. He will also inaugurate the 18th Pravasi Bhartiya Divas (PBD) convention at Bhubaneswar on 9th January at 10 AM.India’s talented youth driving unprecedented growth across sectors: Prime Minister
January 04th, 04:14 pm
The Prime Minister, Shri Narendra Modi praised India’s remarkable achievements across various sectors, attributing the success to the energy and talent of the nation’s youth.ONDC has contributed to empowering small businesses and revolutionising e-commerce: PM Modi
January 02nd, 10:23 am
The Prime Minister Shri Narendra Modi today highlighted ONDC’s contribution in empowering small businesses and revolutionising e-commerce and remarked that it will play a vital role in furthering growth and prosperity.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் ஏன் முன் எப்போதும் இல்லாத வகையில் செழித்து வருகின்றன - மோடி சகாப்தத்தின் வங்கி வெற்றிக் கதையின் உள்ளே
December 18th, 07:36 pm
மோடி சகாப்தத்தை அதன் முன்னோடிகளிலிருந்து வேறுபடுத்தும் ஒரு போட்டி நன்மை வெற்றிகரமான கொள்கைகளை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் தேசிய நலனுக்காக அவற்றைப் பெருக்கி விரிவுபடுத்துகிறது.இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
December 16th, 03:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
December 13th, 12:53 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும்.திரு சசிகாந்த் ரூயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
November 26th, 09:27 am
தொழில்துறை உலகின் மாபெரும் மனிதரான திரு சசிகாந்த் ரூயா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் உயர்ந்த அளவுகோல்களை அமைத்ததற்காக திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
October 03rd, 10:50 am
மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தெற்கின் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கௌடில்யா பொருளாதார மாநாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி நிறுவனம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.Basic spirit of Vishwakarma Yojna is ‘Samman Samarthya, Samridhi: PM in Wardha
September 20th, 11:45 am
PM Modi addressed the National PM Vishwakarma Program in Wardha, Maharashtra, launching the ‘Acharya Chanakya Skill Development’ scheme and the ‘Punyashlok Ahilyadevi Holkar Women Startup Scheme.’ He highlighted the completion of one year of the PM Vishwakarma initiative, which aims to empower artisans through skill development. The PM laid the foundation stone for the PM MITRA Park in Amravati, emphasizing its role in revitalizing India's textile industry.மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
September 20th, 11:30 am
மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 'ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு' திட்டம் மற்றும் 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்' ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.உலகளாவிய தெற்கின் குரல் அமைப்பின் 3-வது மாநாட்டுத் தலைவர்களின் தொடக்க அமர்வில் பிரதமரின் நிறைவுரை
August 17th, 12:00 pm
உங்களது மதிப்புமிக்க யோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும், நமக்கு பொதுவான பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். உங்களது கருத்துகள் உலகளாவிய தெற்கு அமைப்பு ஒன்றுபட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்
August 15th, 10:16 am
78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 30 அன்று நடைபெறவுள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்
July 29th, 12:08 pm
புதுதில்லியில் உள்ள விக்ஞான் பவனில் 2024, ஜூலை 30, அன்று வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியப் பயணம், மத்திய பட்ஜெட் 2024-25-க்கு பிந்தைய மாநாடு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 22nd, 10:30 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் நேர்மறையானதாகவும், ஆக்கப்பூர்வ மானதாகவும், மக்களின் கனவுகளை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதாகவும் இருக்கும் என்று ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்
July 22nd, 10:15 am
அப்போது பேசிய பிரதமர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த பெருமிதத்திற்குரியது என்றார். எனவே மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை மதிப்பு வாய்ந்ததாக இந்த நாடு பார்க்கிறது. இந்த பட்ஜெட் அமிர்த காலத்திற்கான ஒரு மைல்கல் பட்ஜெட் என்று குறிப்பிட்ட பிரதமர், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். “இந்த பட்ஜெட், தற்போதைய அரசுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதுடன், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமையும்” என்று அவர் குறிப்பிட்டார்.பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
July 12th, 01:52 pm
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (12.07.2024) கூட்டாக சந்தித்தனர்.