PM Modi greets the people of Nagaland on their Statehood Day
December 01st, 12:28 pm
The Prime Minister Shri Narendra Modi today greeted the people of Nagaland on their Statehood Day. He remarked that Naga culture was known for its spirit of duty and compassion.PM Modi greets the Border Security Force on their Raising Day
December 01st, 08:52 am
The Prime Minister Shri Narendra Modi today greeted the Border Security Force on their Raising Day. He lauded the BSF for standing as a critical line of defence, embodying courage, dedication and exceptional service.PM Modi congratulates Shri Hemant Soren on taking oath as Jharkhand CM
November 28th, 07:27 pm
Prime Minister Shri Narendra Modi today congratulated Shri Hemant Soren on taking oath as Chief Minister of Jharkhand.PM Modi greets the nation on the occasion of Constitution day and 75th anniversary of Constitution
November 26th, 09:01 am
The Prime Minister Shri Narendra Modi today greeted the nation on the occasion of Constitution day and 75th anniversary of Constitution.பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:05 pm
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
November 15th, 04:55 pm
கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.தாய்நாட்டின் கௌரவம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பதில் நமது பழங்குடியினர் சமுதாயத்தினரின் ஒப்பிடமுடியாத வீரம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக பழங்குடியின கௌரவ தினம் திகழ்கிறது: பிரதமர்
November 15th, 01:50 pm
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை அனைவரும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, பழங்குடியினர் கௌரவ தினம் என்பது தாய்நாட்டின் கௌரவம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாப்பதில் நமது பழங்குடியின சமூகங்களின் ஒப்பிடமுடியாத வீரம் மற்றும் தியாகத்தின் சின்னமாகும் என்று என்று குறிப்பிட்டுள்ளார்.ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 15th, 09:34 am
ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். இயற்கை வளங்கள் நிரம்பிய இந்த மாநிலம், வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 15th, 08:44 am
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.தமது நைஜீரியா பயணம் குறித்த உற்சாகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு
November 14th, 05:03 pm
தமது நைஜீரிய பயணத்தை முன்னிட்டு இந்தி ஆர்வலர்கள் அளித்த அன்பான வரவேற்பு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உற்சாகத்தையும், பாராட்டுகளையும் இன்று பகிர்ந்து கொண்டார்.2024 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் பாராட்டு
November 12th, 04:03 pm
உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் 2024-ல், பங்கஜ் அத்வானி, பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றதை ஒரு தனித்துவமான சாதனை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 11th, 08:57 pm
மொரீஷியஸ் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் நவின் ராம்கூலமின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.PM Modi conveys best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India
November 11th, 01:34 pm
The Prime Minister, Shri Narendra Modi has conveyed his best wishes to Justice Sanjiv Khanna on taking oath as Chief Justice of Supreme Court of India.உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 09th, 11:00 am
உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
November 09th, 10:40 am
உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மஹாபர்வ் சாத் சடங்குகள், குடிமக்களை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் பலப்படுத்துகின்றன: பிரதமர்
November 08th, 08:40 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சாத் பூஜையின் காலை பிரார்த்தனை என்னும் புனிதமான நாளில் குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் மஹாபர்வ் சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகள் குடிமக்களுக்கு புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.சத் பண்டிகையின் சந்தியா அர்க்யாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
November 07th, 03:20 pm
சத் பண்டிகையின் சந்தியா அர்க்யா (மாலை பிரார்த்தனை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சாத் பூஜையின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து
November 05th, 03:35 pm
சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
November 03rd, 09:53 am
பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்
October 31st, 10:46 pm
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.