உலக சுற்றுச்சூழல் தினம் 2023 நிகழ்வையொட்டி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 05th, 03:00 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உங்கள் அனைவருக்கும், நமது நாட்டினருக்கும், உலகின் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் என்பது இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளாகும், உலகளாவிய முன்முயற்சிக்கு முன்னதாகவே, இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது. ஒருபக்கம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடை செய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது. இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிய சந்திப்பில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

June 05th, 02:29 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி உலகின் அனைத்து நாடுகளுக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின கருப்பொருளான, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கைவிடும் இயக்கம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தியா இந்த திசையில் கடந்த 4-5 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்கான பணியை 2018-ல் இரண்டு நிலைகளில் இந்தியா தொடங்கியது என்று பிரதமர் தெரிவித்தார். “ஒருபக்கம், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் தடைசெய்துள்ளோம், மறுபக்கம் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சியை நாம் கட்டாயமாக்கியுள்ளோம்” என்று அவர் கூறினார். இதன் காரணமாக இந்தியாவில் உருவாகும் மொத்த வருடாந்திர பிளாஸ்டிக் கழிவுகளில் 75 சதவீதமாக உள்ள சுமார் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கட்டாயமாகியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வரம்புக்குள் சுமார் 10 ஆயிரம் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், வணிக நிறுவனங்களும் வந்துள்ளன.

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்

September 09th, 09:21 pm

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார்.