கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் விருதை ஏற்றுக் கொண்டு, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 17th, 08:30 pm
நைஜீரியாவின் தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜரை எனக்கு வழங்கி கௌரவித்த உங்களுக்கும், அரசிற்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவத்தை நான் பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கவுரவத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான நீடித்த நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த கவுரவம் இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான உத்திசார் கூட்டாண்மையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.பிரதமருக்கு "கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்" என்ற தேசிய விருது வழங்கப்பட்டது
November 17th, 08:11 pm
நைஜீரிய கூட்டாட்சி குடியரசின் அதிபர் மேதகு திரு. போலா அகமது டினுபு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ராஜதந்திரம் மற்றும் இந்திய-நைஜீரிய உறவுகளை மேம்படுத்துவதில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் என்ற தேசிய விருதை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய அதிகார மையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவரது உருமாற்றம் செய்யும் ஆட்சி அனைவருக்கும் ஒற்றுமை, அமைதி மற்றும் பகிரப்பட்ட செழிப்பை வளர்த்துள்ளது என்றும் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் குறிப்பிடுகிறது.