வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் தலைவர்கள்; வணிகம் மற்றும் வர்த்தகத் துறையின் பங்குதாரர்கள் ஆகியோருடன் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 06th, 06:31 pm
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தக வணிகத் துறையினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 06th, 06:30 pm
ஒரு புதிய முயற்சியாக, பிரதமர் திரு.நரேந்திர மோடி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் மற்றும் வர்த்தகம் & வணிகத் துறையினருடன், காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்த கலந்துரையாடலின்போது உடனிருந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், மாநில அரசுகளின் அதிகாரிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் வணிகர் பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து
July 07th, 09:20 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட தனது சக அமைச்சர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் பதவிக்காலம் மிகச் சிறப்பாக அமையவும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.