மஹாராஷ்டிராவின் கோண்டியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

November 29th, 04:54 pm

மகாராஷ்டிராவின் கோண்டியாவில் பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து கருணைத் தொகையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.