வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

December 23rd, 11:00 am

நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்

December 23rd, 10:30 am

அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 24th, 10:36 am

உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் திரு அர்ஜுன் முண்டா மற்றும் திரு பியூஷ் கோயல் அவர்களே, தேசிய கூட்டுறவு சங்கக் குழுக்களின் அதிகாரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

February 24th, 10:35 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

அமுல், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

February 22nd, 11:30 am

குஜராத் ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, எனது அமைச்சரவை சகா திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற சகா திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, அமுல் நிறுவனத்தின் தலைவர் திரு ஷமல் பாய் அவர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்

February 22nd, 10:44 am

அகமதாபாத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், பொன்விழா புத்தகத்தை வெளியிட்டார்.

குஜராத் மாநிலம் தியோதர் பனாஸ் பால்பண்ணையில் மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

April 19th, 11:02 am

அன்னை அம்பா, அன்னை நரேஷ்வரியை வணங்கி உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். கிராமப்புற பொருளாதாரத்தையும், இந்தியாவின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரமளித்தலையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதை, தற்சார்பு இந்தியா இயக்கத்தை கூட்டுறவு இயக்கம் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை ஒருவர் இங்கு நேரடியாகவே உணர முடியும். காசியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற முறையில் பனாஸ் பால்பண்ணைக்கும், வாரணாசியிலும் ஒரு வளாகத்தை ஏற்படுத்தியுள்ள பனாஸ்கந்தா மக்களுக்கும் நன்றி.

பனாஸ்கந்தாவில் தியோதரில் உள்ள பனாஸ் பால்வள வளாகத்தில் பலவகையான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

April 19th, 11:01 am

பனாஸ்கந்தா மாவட்டம் தியோதரில் ரூ.600 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பால்வள வளாகத்தையும், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலையையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய பால்வள வளாகம், ஒரு பசுமைத் திட்டமாகும். இந்த பால்வள வளாகத்தில் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுவதோடு, 80 டன் வெண்ணை, ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்கிரீம், 20 டன் கொழுப்பு நீக்கிய பால் (கோயா), 6 டன் சாக்லேட் உற்பத்தி செய்ய முடியும். உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலை, பிரெஞ்ச் ஃபிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு சமோசா, பஜ்ஜி போன்ற பலவகையான உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

ஏப்ரல் 18 முதல் 20வரை குஜராத் செல்கிறார் பிரதமர்

April 16th, 02:36 pm

பிரதமர் திரு.நரேந்திரமோடி, 2022 ஏப்ரல் 18 முதல் 20-ந் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 18 அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார். ஏப்ரல் 19 காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பிற்பகல் 3.30மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏப்ரல் 20 அன்று காவை 10.30மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3.30மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர், சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.