பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 13th, 02:10 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 13th, 02:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய 'மகாயாகம்' உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 09th, 11:00 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களேராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 09th, 10:34 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024 மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.சர்வதேச கூட்டுறவு மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
November 25th, 03:30 pm
எனது இளம் சகோதரர் போன்ற பூடான் பிரதமர் , ஃபிஜியின் துணைப் பிரதமர், பாரதத்தின் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, சர்வதேச கூட்டுறவு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் அவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளே, கூட்டுறவு அமைப்புகளுடன் தொடர்புடைய பிரதிநிதிகளே, தாய்மார்களே,ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 25th, 03:00 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.ஜெர்மனி பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 25th, 01:50 pm
முதலாவதாக, இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஷோல்ஸையும் அவரது தூதுக்குழுவினரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தியா வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.Science for Self-Reliance is our mantra: PM Modi
September 26th, 05:15 pm
PM Modi dedicated to the nation three PARAM Rudra Supercomputers worth around Rs 130 crore. Developed indigenously under the National Supercomputing Mission, these supercomputers have been deployed in Pune, Delhi and Kolkata to facilitate pioneering scientific research. The PM also inaugurated a High-Performance Computing system tailored for weather and climate research.மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
September 26th, 05:00 pm
சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் (NSM) கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், முன்னோடி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காக புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ளன. வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.Tuticorin International Container Terminal marks a significant milestone in India’s journey towards a Viksit Bharat: PM Modi
September 16th, 02:00 pm
PM Modi addressed the inauguration of Tuticorin International Container Terminal. Speaking on the occasion, the PM underlined that this marks a significant milestone in India’s journey towards becoming a developed nation and hailed the new Tuticorin International Container Terminal as the ‘new star of India's marine infrastructure’.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்புவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 16th, 01:52 pm
தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், 'இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்' என்று பாராட்டினார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது வ.உ.சி. துறைமுகம் தொடர்பாக தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டதில் அவர் திருப்தி தெரிவித்தார். முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பாகும், அதன் ஊழியர்களில் 40% பெண்கள், இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.The speed and scale of our govt has changed the very definition of mobility in India: PM Modi
February 02nd, 04:31 pm
Prime Minister Narendra Modi addressed a program at India’s largest and first-of-its-kind mobility exhibition - Bharat Mobility Global Expo 2024 at Bharat Mandapam, New Delhi. Addressing the gathering, the Prime Minister congratulated the motive industry of India for the grand event and praised the efforts of the exhibitors who showcased their products in the Expo. The Prime Minister said that the organization of an event of such grandeur and scale in the country fills him with delight and confidence.பாரத் வாகனத் தொழில் உலகளாவிய எக்ஸ்போ 2024-ல் பிரதமர் உரையாற்றினார்
February 02nd, 04:30 pm
புதுதில்லி, பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதலாவது இவ்வகையான வாகன போக்குவரத்து கண்காட்சியான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024, நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். கண்காட்சியின் அரங்குகளையும் அவர் பார்வையிட்டார். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 வாகனம் மற்றும் வாகன மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் திறன்களைக் காட்டுகிறது மற்றும் கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குபவர்-விற்பவர் சந்திப்புகள், மாநில அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்கு மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட அரங்குகளையும் கொண்டிருக்கும்.குஜராத்தின் காந்திநகரில் துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 10th, 10:30 am
உங்கள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ' அமிர்த காலத்தின்' போது நடைபெறும் இந்த முதல் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உச்சிமாநாட்டில் எங்களுடன் இணைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மதிப்புமிக்க கூட்டாளிகள். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
January 10th, 09:40 am
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பது இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆகும். இதில் 34 நட்பு நாடுகள், 16 கூட்டமைப்புகள் பங்கேற்றுள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்த வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த உச்சிமாநாடு ஒரு தளமாக பயன்படுத்தப்படுகிறது.77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
August 15th, 02:14 pm
எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இப்போது மக்கள் தொகையின் கண்ணோட்டத்தில் கூட நாம் நம்பிக்கையில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பலர் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய நாடு, 140 கோடி நாட்டு மக்கள், எனது சகோதர சகோதரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் இன்று சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவை நேசிக்கும், இந்தியாவை மதிக்கும், இந்தியாவைப் பற்றி பெருமிதம் கொள்ளும் கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் இந்த மாபெரும் சுதந்திரத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.India Celebrates 77th Independence Day
August 15th, 09:46 am
On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல் மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில் இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜப்பான் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை செய்தி
March 20th, 12:30 pm
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு கிஷிடா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு கிஷிடாவும், நானும் கடந்த ஓராண்டில் பலமுறை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இந்தியா- ஜப்பான் நட்புறவையொட்டிய அவரது நேர்மறையான உறுதித்தன்மையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அவருடைய வருகை இன்று நமது ஒத்துழைப்பு தருணத்தை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 18th, 11:17 pm
இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.