டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
November 21st, 09:29 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
November 21st, 09:13 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:"சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 18th, 08:00 pm
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 07:55 pm
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் விருதை ஏற்றுக் கொண்டு, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 17th, 08:30 pm
நைஜீரியாவின் தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜரை எனக்கு வழங்கி கௌரவித்த உங்களுக்கும், அரசிற்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவத்தை நான் பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கவுரவத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான நீடித்த நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த கவுரவம் இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான உத்திசார் கூட்டாண்மையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.பிரதமருக்கு "கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்" என்ற தேசிய விருது வழங்கப்பட்டது
November 17th, 08:11 pm
நைஜீரிய கூட்டாட்சி குடியரசின் அதிபர் மேதகு திரு. போலா அகமது டினுபு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ராஜதந்திரம் மற்றும் இந்திய-நைஜீரிய உறவுகளை மேம்படுத்துவதில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர் என்ற தேசிய விருதை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய அதிகார மையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவரது உருமாற்றம் செய்யும் ஆட்சி அனைவருக்கும் ஒற்றுமை, அமைதி மற்றும் பகிரப்பட்ட செழிப்பை வளர்த்துள்ளது என்றும் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் குறிப்பிடுகிறது.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 05:22 pm
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 03:25 pm
இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
October 23rd, 03:10 pm
கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 11th, 08:15 am
ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
October 11th, 08:10 am
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
October 03rd, 10:50 am
மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தெற்கின் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கௌடில்யா பொருளாதார மாநாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி நிறுவனம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.India's heritage is not just a history. India's heritage is also a science: PM Modi
July 21st, 07:45 pm
PM Modi inaugurated the 46th session of the World Heritage Committee at Bharat Mandapam in New Delhi. On this occasion, he remarked that India's history and civilization are far more ancient and expansive than commonly perceived. The Prime Minister emphasized that Development along with Heritage is India's vision, and over the past decade, the government has taken unprecedented steps for the preservation of heritage.புதுதில்லி பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
July 21st, 07:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் உலகப் பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கூடும் உலகப் பாரம்பரியக் குழு, உலகப் பாரம்பரியம் குறித்த அனைத்து விஷயங்களை நிர்வகிப்பதற்கும், உலகப் பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட வேண்டிய தளங்களைத் தீர்மானிப்பதற்கும் பொறுப்பேற்கும். இந்தியா முதல் முறையாக உலகப் பாரம்பரிய குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு கண்காட்சிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.ஜி7 அபுலியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 13th, 05:51 pm
பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், 2024 ஜூன் 14 அன்று நடைபெறும் ஜி7 அவுட்ரீச் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் உள்ள அபுலியா பகுதிக்கு நான் பயணம் மேற்கொள்கிறேன்.