
இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 24th, 02:00 pm
மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் எனது நண்பர்களே, வணக்கம். இன்றும், அடுத்த இரண்டு நாட்களிலும், பாரதத்தின் வளர்ந்து வரும் துறையான எஃகுத் துறையின் திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட உள்ளோம். இந்தத் துறை, பாரதத்தின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவதுடன், 'வளர்ந்த இந்தியா’ என்பதற்கான வலுவான அடித்தளமாகவும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதும் துறையாகவும் திகழ்கிறது. இந்தியா ஸ்டீல் 2025-க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய தொடக்க தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இது எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.
இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 24th, 01:30 pm
மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களில், நாட்டின் முன்னோடித் துறையான எஃகுத் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதையுமா அதனை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். எஃகு உற்பத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது என்றும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஸ்டீல் 2025 கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை குறித்த இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் ஆற்றிய உரை
March 04th, 01:00 pm
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்த இந்த பட்ஜெட் இணையவழி கருத்தரங்கு ஒவ்வொரு அம்சத்திலும் மிகவும் முக்கியமானது. உங்களுக்குத் தெரியும். இந்த பட்ஜெட் நமது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதலாவது முழு பட்ஜெட் ஆகும். நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பல துறைப்பிரிவுகளில்அரசு பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதை நீங்கள் பட்ஜெட்டில் பார்த்திருப்பீர்கள். உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக பட்ஜெட்டில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 04th, 12:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இணைய கருத்தரங்குகள் வளர்ச்சியின் எந்திரங்களாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை எடுத்துக் கொண்டு நடத்தப்படுகின்றன. வளர்ச்சியின் உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி இயக்கங்கள்; ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, ஏற்றுமதி குறித்து நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையகருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். இந்த வரவு செலவுத் திட்டம்(பட்ஜெட் )அரசின் 3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழு வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் விநியோகம் என்றும் இது எதிர்பார்ப்புகளுக்கு மேலானது என்றும் தெரிவித்தார். பல துறைகளில், நிபுணர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
November 25th, 08:42 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ஒரே நாடு, ஒரே சந்தா என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும். இதன் மூலம் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இதழ்களைப் படிக்க முடியும்.இது அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கான ஒரே நாடு ஒரு சந்தா வசதியாக இருக்கும்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 05:22 pm
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.டிஜிட்டல் தொழில்நுட்பம் பொதுவான மனிதரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி
July 09th, 05:35 pm
பிரதமர் மோடி மற்றும் கொரியக் குடியரசின் அதிபர் மூன் ஜே-இன்-னும் நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையைக் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். தென் கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் கைப்பேசி உற்பத்தி ஆலைகளின் முதலீடுகள் ஒரு அடித்தளமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். கைப்பேசிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்பிரதமரும் கொரிய அதிபரும் நொய்டாவில் செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தனர்
July 09th, 05:34 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி கொரியக் குடியரசின் அதிபர் திரு. மூன் ஜே-இன்-னும் இன்று (09.07.2018) நொய்டாவில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தனர்.