புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை
January 17th, 11:00 am
கடந்த முறை நான் உங்களிடையே வந்தபோது, மக்களவைத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை. அந்த நேரத்தில், உங்கள் அனைவரின் நம்பிக்கையின் காரணமாக, அடுத்த முறையும் இந்தக் கண்காட்சிக்கு கண்டிப்பாக வருவேன் என்று நான் கூறியிருந்தேன். நாடு மூன்றாவது முறையாக எங்களை ஆசீர்வதித்துள்ளது. நீங்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை என்னை இங்கு அழைத்துள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாரத் வாகனத் தொழில் துறையின் சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 17th, 10:45 am
நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தித் தொழில்துறை கண்காட்சியான பாரத் வாகனத் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பிஜேபி-யைத் தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 800 கண்காட்சியாளர்கள், 2.5 லட்சம் பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி தலைநகரில் மேலும் இரண்டு இடங்களில் நடைபெறுவதாக அவர் கூறினார். அடுத்த 5 நாட்களில் ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் பல புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். போக்குவரத்துத் துறையில் எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகக் கூறினார். இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வாகன உற்பத்தித் தொழில் சிறந்த நிலையில், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாராக உள்ளது என்று கூறிய அவர், இக்கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) டிசம்பர் 12 அன்று பிரதமர் தொடங்கி வைப்பார்
December 11th, 04:27 pm
ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட பல்வேறு சம்பந்தப்பட்டவர்களின் முன்முயற்சியாகும், இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைமைத்துவமாக இந்தியா உள்ளது.