
இரண்டாவது கட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் பூமி பூஜை செய்தார்
January 18th, 10:30 am
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர், மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்டப் பணிகள், சூரத் மெட்ரோ திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 18th, 10:30 am
உத்தராயன் தொடக்க தினமான இன்று, அகமதாபாத், சூரத் நகரங்களுக்கு மிக முக்கியப் பரிசு கிடைத்துள்ளது. நாட்டின் இரு பெரும் வர்த்தக மையங்களான அகமதாபாத் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள், இவ்விரு நகரங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். கெவாடியாவிற்கு, நேற்று புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, அகமதாபாதிலிருந்து கெவாடியாவிற்கு, அதிநவீன ஜன்-சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதை முன்னிட்டு, குஜராத் மக்களைப் பாராட்டுவதோடு, எனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத்தில் மூன்று முக்கியத் திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 24th, 10:49 am
குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் பட்டேல் அவர்களே, குஜராத் மாநில பிஜேபி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சி.ஆர். பட்டேல் அவர்களே, மாநிலத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளே வணக்கம்.குஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 24th, 10:48 am
விவசாயிகளுக்கு 16 மணி நேரம் மின் விநியோகம் வழங்கும் கிசான் சூர்யோதய திட்டத்தை திரு. மோடி தொடங்கி வைத்தார். யு.என். மேத்தா இருதயவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான இதய மருத்துவமனையைத் தொடங்கி வைத்த அவர், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் தொலை இருதயவியலுக்கான கைபேசி செயலியையும் ஆரம்பித்து வைத்தார்.