திரு கிரிதர் மாளவியா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 18th, 06:18 pm

பாரத ரத்னா மஹாமானா பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் கொள்ளுப் பேரன் கிரிதர் மாளவியா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கங்கை நதித் தூய்மை இயக்கம் மற்றும் கல்வி உலகிற்கு திரு கிரிதர் மாளவியா அளித்த பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.