Thanks to the efforts of India's fintech community, our Swadeshi solutions are gaining global relevance: PM Modi in Mumbai

October 09th, 02:51 pm

In his address at the Global Fintech Fest 2025, PM Modi remarked that over the past decade, India has successfully democratized technology. He emphasized that India has demonstrated how technology can serve not only as a tool of convenience but also as a means of equality. Highlighting that digital payments have become routine in India, the PM attributed this success to the JAM Trinity. He extended an invitation to every global partner to collaborate with India.

மும்பையில் உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025-ல் பிரதமர் உரையாற்றினார்

October 09th, 02:50 pm

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025ல் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு திருவிழாவில் கூட்டு நாடக இங்கிலாந்து பங்கேற்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இரண்டு முக்கிய ஜனநாயகங்களுக்கு இடையேயான கூட்டுமுயற்சி, உலகளாவிய நிதி சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். “இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை, இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல்கள் அல்லது கொள்கை வடிவமைப்புடன் மட்டுப்படுவதில்லை, மாறாக ஆளுகையின் வலிமையான தூணாக உருவாகி இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமரின் பயணம்: விளைவுகளின் பட்டியல்

October 09th, 01:55 pm

இந்தியா-பிரிட்டன் இணைப்பு மற்றும் புத்தாக்க மையம் நிறுவுதல்

India’s dynamism and the UK’s expertise together create a unique synergy: PM Modi at Joint Press Meet

October 09th, 11:25 am

In his remarks at the joint press meet, PM Modi said that under the leadership of PM Starmer, India-UK relations have made remarkable progress. He highlighted that PM Starmer is accompanied by the largest and most influential delegation from the education sector to date. The PM remarked that the 1.8 million Indians residing in the UK, through their valuable contributions to British society and economy, have strengthened the bridge of friendship, cooperation, and development between the two countries.

இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

September 04th, 08:04 pm

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

September 04th, 12:45 pm

சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

August 25th, 06:42 pm

இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாது

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

August 25th, 06:15 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

காந்தி நகரில் குஜராத் நகர வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 27th, 11:30 am

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் அவர்களே, முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர்லால் அவர்களே, சி ஆர் பாட்டீல் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்துள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே!

குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டுக் கால கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

May 27th, 11:09 am

குஜராத்தின் காந்திநகரில் இன்று நடைபெற்ற குஜராத் நகர்ப்புற வளர்ச்சிக் கதையின் 20 ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது, 2005-ம் ஆண்டின் நகர்ப்புற வளர்ச்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை நகர்ப்புற வளர்ச்சி ஆண்டாக அவர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வதோதரா, தாஹோத், பூஜ், அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 நாட்களில் பயணம் செய்தபோது, ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் முழக்கத்துடனும், பறக்கும் மூவர்ணக் கொடிகளுடனும் தேசபக்தியின் உற்சாகத்தை தாம் அனுபவித்து வருவதாகக் கூறினார். இது காண்பதற்கு ஒரு காட்சி என்றும், இந்த உணர்வு குஜராத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இருப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் முள்ளை அகற்ற இந்தியா முடிவு செய்தது, அதை மிகுந்த உறுதியுடன் செய்தது என்று பிரதமர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெற்ற சோல் தலைமைத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 21st, 11:30 am

பூடான் பிரதமர் எனது சகோதரர் டாஷோ ஷெரிங் டோப்கே அவர்களே, சோல் நிறுவன வாரியத் தலைவர் சுதிர் மேத்தா அவர்களே, துணைத் தலைவர் ஹன்ஸ்முக் ஆதியா அவர்களே, தொழில்துறை உலகின் ஜாம்பவான்களே, தங்கள் வாழ்க்கையில், தத்தமது துறைகளில் தலைமைப் பண்பை வழங்குவதில் வெற்றி கண்டவர்களே, இதுபோன்ற பல மகத்தான மனிதர்களை நான் இங்கு காண்கிறேன். இங்கே எனது இளம் சகாக்களையும் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 21st, 11:00 am

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். நாட்டைக் கட்டமைப்பதில் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் தலைமைத்துவப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி வழங்கும் சோல் என்பது பெயரில் மட்டும் அல்ல, இந்தியாவின் சமூக வாழ்வியலில் ஆன்மாவாக திகழும் என்று கூறினார். இந்தப் பயிற்சி நிறுவனம் ஆன்மீக அனுபவத்தின் சாராம்சத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் நகரில் விரைவில் இந்த சோல் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 23rd, 05:22 pm

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.

16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

October 23rd, 03:10 pm

கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

This is the golden period of India: PM Modi in Ahmedabad, Gujarat

September 16th, 04:30 pm

PM Modi inaugurated and laid the foundation stone for multiple development projects of railways, road, power, housing and finance sectors worth more than Rs 8,000 crore in Ahmedabad, Gujarat. The PM also inaugurated Namo Bharat Rapid Rail between Ahmedabad and Bhuj. PM Modi said that it will prove to be a new milestone in India’s urban connectivity. He said that he dedicated the first 100 days towards formulating policies and taking decisions towards public welfare and national interest.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

September 16th, 04:02 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரயில்வே, சாலை, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நிதித் துறைகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக, அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே, இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயிலை திரு மோடி தொடங்கி வைத்தார். நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.

Boeing’s new facility is a clear indication of Karnataka’s rise as a new aviation hub: PM Modi

January 19th, 03:15 pm

Prime Minister Narendra Modi inaugurated the new state-of-the-art Boeing India Engineering & Technology Center (BIETC) campus in Bengaluru, Karnataka. Addressing the gathering, PM said that Bengaluru is a city which links aspirations to innovations and achievements, and India’s tech potential to global demands. “Boeing’s new technology campus is going to strengthen this belief”, the Prime Minister said, informing that the newly inaugurated campus is Boeing’s largest facility located outside the USA.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்

January 19th, 02:52 pm

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) திறந்து வைத்தார். ரூ. 1,600 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 43 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும். நாட்டில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கிஃப்ட் நகரில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

January 10th, 10:06 pm

கிஃப்ட் நகரில் இன்று நடைபெற்ற உலகளாவிய ஃபின்டெக் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

குஜராத்தின் காந்திநகரில் துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 10th, 10:30 am

உங்கள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ' அமிர்த காலத்தின்' போது நடைபெறும் இந்த முதல் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உச்சிமாநாட்டில் எங்களுடன் இணைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மதிப்புமிக்க கூட்டாளிகள். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.