ஆரிய சமாஜ் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் அஞ்சலி

November 22nd, 03:09 am

கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆர்ய சமாஜ் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். கயானாவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று திரு மோடி கூறினார். இந்த ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுரினாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 21st, 10:57 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, சுரினாம் அதிபர் மேதகு திரு. சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

கிரெனடா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 10:44 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி.கிரெனடா பிரதமர் மேதகு திரு. டிக்கோன் மிட்செல்லை சந்தித்தார்.

டிரினிடாட் & டொபாகோ பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 10:42 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் கீத் ரவுலேவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்திய வருகை நினைவுச் சின்னத்தை பிரதமர் பார்வையிட்டார்

November 21st, 10:00 pm

ஜார்ஜ்டவுனில் உள்ள நினைவுச் சின்னத் தோட்டத்தில் உள்ள இந்திய வருகைச் சின்னத்தை பிரதமர் இன்று பார்வையிட்டார். அவருடன் கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் பிலிப்ஸும் சென்றார். வருகை நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமரை தாஸ்ஸா டிரம்ஸ் இசைக் குழுவினர் வரவேற்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்களின் போராட்டம் மற்றும் தியாகங்களையும், கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நினைவுச்சின்னத்தில் பெல் பத்ரா மரக்கன்றை அவர் நட்டார்.

மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

November 21st, 09:57 pm

கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரோமினேட் கார்டனில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மகாத்மா காந்தியின் மாண்புகளை அவர் நினைவு கூர்ந்தார். 1969-ஆம் ஆண்டில் காந்திஜியின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.

டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 09:29 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

November 21st, 09:37 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. கேஸ்டன் பிரவுனை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார்.

பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 21st, 09:13 am

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.

கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை

November 21st, 04:23 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்றனர்

November 20th, 11:27 pm

கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.