ஜனவரி 12 அன்று பிரதமர் மகாராஷ்டிரா செல்கிறார்

January 11th, 11:12 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜனவரி 12 அன்று மகாராஷ்டிரா செல்கிறார். மதியம் 12.15 மணியளவில் நாசிக் செல்லும் பிரதமர், அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், மும்பையில், அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி - நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார். மாலை 4.15 மணியளவில் நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களைத். தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 17th, 12:00 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் வைர வணிக மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 11:30 am

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்தியா-ரஷ்யா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்

June 01st, 08:05 pm

இந்திய-ரஷ்ய வணிக மன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, “வர்த்தகம், தொழில் மற்றும் பொறியியல் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த துறைகள். இந்திய சந்தைகள் அளிக்கும் வாய்ப்புகளை ரஷ்ய நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு அலசி, ஆராய்ந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளில், இந்தியா, ரஷ்யா இடையேயான மேம்பட்ட பாதுகாப்பு துறை உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

PM Modi inaugurates Diamond Manufacturing Unit in Surat, Gujarat

April 17th, 10:56 am

PM Narendra Modi inaugurated the Diamond Manufacturing Unit of M/s Hare Krishna Exports Pvt Ltd in Surat. The Prime Minister said Surat has made a mark in the diamond industry but there is now need to look at the entire gems and jewellery sector. He said that as far as the gems and jewellery sector is concerned, our aim should not only be ‘Make in India’ but also 'Design in India'.