ஆக்ராவிற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரூ.2,980 கோடி மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் சிறந்த, உத்தரவாதமான குடிநீர் விநியோகத்திற்கு கங்காஜல் திட்டத்தை பிரதமர் தொடங்குவார் ஆக்ராவில் பொதுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார்
January 08th, 06:54 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 09.01.2019 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவர் கங்காஜல் திட்டத்தையும், மற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். ஆக்ரா பொலிவுறு நகரத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கும் எஸ்.என். மருத்துவக் கல்லூரியின் தர மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.