தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 08th, 06:00 pm

இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள எனது நண்பர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திருமிகு டயானா கெல்லாக் அவர்களே, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, கலை உலகின் புகழ்பெற்ற நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார்

December 08th, 05:15 pm

தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்

உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 03rd, 07:48 pm

கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் கூடியிருக்கும் அனைத்து துறவிகள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கம். கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகுரு அவர்களால் பரப்பப்பட்ட இந்திய அறிவு, சேவை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் பாரம்பரியங்கள் இன்றும் தொடர்ந்து வளர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குருகிருஷ்ண பிரேமானந்த் பிரபு ஜியின் ஆசியாலும், கிருஷ்ணகுருவின் பக்தர்களின் முயற்சியாலும், இந்த நிகழ்ச்சியில் தெய்வீகம் தெளிவாகத் தெரிகிறது. அசாமுக்கு வந்து உங்கள் அனைவரோடும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று ஆசைப்பட்டேன்! கடந்த காலத்தில் கிருஷ்ணகுரு ஜி-யின் புனிதத் தலத்திற்கு வரப் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் என் முயற்சியில் சில தோல்விகள் இருந்திருக்கலாம். என்னால் அங்கு நேரில் வர முடியவில்லை. கிருஷ்ணகுருவின் ஆசீர்வாதங்கள் எதிர்காலத்தில் உங்கள் அனைவரையும் வணங்கி உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.

உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் பிரதமர் உரை

February 03rd, 04:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் உள்ள கிருஷ்ணகுரு சேவாஷ்ரமத்தில் இன்று நடைபெற்ற உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனையில் காணொலி மூலம் பங்கேற்று உரையைாற்றினார். உலக அமைதிக்கான கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை, கிருஷ்ணகுரு சேவாஸ்ரமத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறுகிறது.

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸின் போக்குவரத்து மற்றும் கூடார நகரத்தை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 13th, 10:35 am

பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், சுற்றுலாத் துறை நண்பர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாரணாசிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள், இதர பிரமுகர்கள், பெண்கள் மற்றும் அன்பர்களே!

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக்கப்பல் - எம்வி கங்கா விலாஸ் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

January 13th, 10:18 am

வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிக் கப்பல்-எம்வி கங்கா விலாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், டென்ட் சிட்டியையும் திறந்து வைத்தார். மேலும் ரூ.1000 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இந்த நதிக் கப்பல் சுற்றுலாவின் புதிய யுகத்தை ஏற்படுத்தும்.