இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார்
August 15th, 03:04 pm
பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 15th, 01:09 pm
நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்த தீரமிக்க எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்தும் இன்றைய தினம் மிகவும் உன்னதமான தருணமாகும். இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள், பாரத் மாதா கி ஜே என்ற முழுக்கத்துடனும், துணிச்சலுடனும் தூக்குமேடை ஏறினார்கள். இவர்களின் மனஉறுதியையும், தேச பக்தியையும் நினைவுகூர்வதற்கான விழாவாகும் இது. இந்த சுதந்திர தின விழாவில், நாம் சுதந்திரமாக சுவாசிக்கும் நல்ல தருணத்தை பெற்றிருப்பதற்கு வீரம் செறிந்த இவர்களே காரணமாவார்கள். இவர்களுக்கு நாடு மிகவும் கடன்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவருக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் வருங்காலத்திற்கான லட்சியத்துடன் கூடிய இலக்கை நிர்ணயித்துள்ளார்
August 15th, 10:16 am
78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.இந்தியா 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
August 15th, 07:30 am
78வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது முதல் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை வென்றெடுப்பது வரை, இந்தியாவின் கூட்டு முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை புதிய வீரியத்துடன் தொடர்வதாக அவர் பேசினார். புதுமை, கல்வி மற்றும் உலகளாவிய தலைமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, 2047க்குள் இந்தியா விக்சித் (வளர்ந்த) பாரதமாக மாறுவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.India’s Top Gamers Meet ‘Cool’ PM Modi
April 13th, 12:33 pm
Prime Minister Narendra Modi engaged in a unique interaction with India's top gamers, immersing himself in the world of PC and VR gaming. During the session, Prime Minister Modi actively participated in gaming sessions, showcasing his enthusiasm for the rapidly evolving gaming industry.