இந்தியா மீண்டும் நிலவுக்குச் செல்கிறது: இந்த முறை நிலவில் இறங்கிய பிறகு மீண்டும் பூமிக்கு வர உள்ளது இந்திய விண்கலம்
September 18th, 04:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 26th, 10:59 pm
கோவா ஆளுநர் திரு. பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களே, மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது பிற சகாக்களே, மேடையில் உள்ள பிரதிநிதிகளே, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அவர்களே, அனைத்து வீரர்கள், உதவி ஊழியர்கள், பிற அதிகாரிகள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இளம் நண்பர்களே…, இந்திய விளையாட்டுகளின் பிரமாண்ட பயணம் இப்போது கோவாவை அடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வண்ணங்களும், உற்சாகமும் உள்ளது. கோவாவின் காற்றில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்கோவாவில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்
October 26th, 05:48 pm
கோவாவின் மார்கோவாவில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 28 இடங்களில் 43-க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.மிஷன் ககன்யான் டிவி டி1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
October 21st, 12:56 pm
மிஷன் ககன்யான் டிவி டி 1 சோதனை கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இது தேசத்தை ஒரு படி மேலே முன்னெடுத்துச் செல்கிறது என்று அவர் புகழ்ந்துரைத்துள்ளார்.ககன்யான் திட்டத்தின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு
October 17th, 01:53 pm
இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.