ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

June 18th, 05:03 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் இடையே, ​​பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டாவுடன் பேச்சு நடத்தினார்.

ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு

ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு

June 18th, 03:17 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை

ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை

June 18th, 03:05 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்

June 18th, 03:04 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடல்

June 18th, 03:00 pm

51-வது ஜி7 உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் உறுதிபூண்டுள்ளன என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு

June 18th, 02:59 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.

Prime Minister interacts with President of France at G7 summit

June 18th, 02:57 pm

The Prime Minister Shri Narendra Modi interacted with the President of France, H.E Mr. Emmanuel Macron at the 51st G7 Summit at Kananaskis, Canada on 17th June 2025. Exchanging perspectives on a wide range of issues, both leaders affirmed that India and France will keep working closely for the betterment of our planet.

ஜி7 உச்சிமாநாட்டில் இடையே இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

June 18th, 02:55 pm

கனடாவில் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற 51-வது ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் உரையாடல்

June 18th, 02:51 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

Prime Minister meets the Prime Minister of Australia on the sidelines of G7 summit

June 18th, 02:49 pm

The Prime Minister Shri Narendra Modi met the Prime Minister of Australia, H.E Mr. Anthony Albanese on the sidelines of 51st G7 Summit at Kananaskis, Canada on 17th June 2025.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கெண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமர் தெளிவுபடுத்தினார்

June 18th, 12:32 pm

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மாநாட்டின் இடையே அமெரிக்கா திரும்பியதையடுத்து அந்நாட்டு அதிபரின் வேண்டுகோளின் பேரில் இருதலைவர்களும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர். 35 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் திரு ட்ரம்ப் இரங்கல் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தீவிரவாத சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

எரிசக்தி பாதுகாப்பு குறித்த ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஜூன் 17, 2025)

June 18th, 11:15 am

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்கும், சிறந்த வரவேற்புக்கும் கனடா பிரதமர் கார்னிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-7 கூட்டமைப்பின் 50 ஆண்டு நிறைவையொட்டி, வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை

June 18th, 11:13 am

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-கனடா இடையே மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்துவதற்காக இருநாட்டு பிரதமர்கள் திரு மோடி, திரு கார்னி சந்திப்பு

June 18th, 08:02 am

ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

இந்தியா – ஜெர்மனி இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை

June 17th, 11:58 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் அதிபர் திரு பிரீட்ரிக் மெர்ஸை சந்தித்துப் பேசினார். 2025-ம் ஆண்டு மே மாதத்தில் ஜெர்மன் அதிபர் திரு மெர்ஸ் பதவியேற்றுக் கொண்ட பிறகு இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த வாரம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து ஜெர்மன் அரசு சார்பில் விடுக்கப்பட்ட இரங்கல் செய்திக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தகம், கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருடன் பேச்சு நடத்தினார்

June 17th, 11:54 pm

கனடாவில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே மெக்சிகோ அதிபர் டாக்டர் கிளாடியா ஷீன்பாம் பர்டோவை, பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் போது, அந்நாட்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி கனடாவின் ஆல்பர்ட்டாவிற்கு வருகை தருகிறார்

June 17th, 07:00 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு கனடா வந்தடைந்தார். அவர் G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

June 15th, 07:00 am

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்

June 14th, 11:58 am

பிரதமர் மோடி ஜூன் 15-16 தேதிகளில் சைப்ரஸுக்கும், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக கனடாவுக்கும், ஜூன் 18 அன்று குரோஷியாவுக்கும் செல்கிறார். பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் லிமாசோலில் வணிகத் தலைவர்களுடன் உரையாற்றுவார். பின்னர் கனடாவில், ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். குரோஷியாவில், பிரதமர் மோடி பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் குரோஷிய அதிபர் சோரன் மிலானோவிக்கைச் சந்திப்பார்.

கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்காக கனடா பிரதமர் திரு. மார்க் கார்னியிடமிருந்து பிரதமருக்கு அழைப்பு

June 06th, 07:12 pm

உரையாடலின் போது, ​​சமீபத்திய தேர்தல் வெற்றிக்காக கனடா பிரதமர் திரு. மார்க் கார்னிக்கு திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.